அந்த ஊரில் மிருக காட்சி சாலை ஒன்றிருந்தது.
அந்த மிருக காட்சியில் எல்லா மிருகங்களும் இருந்தன
சிங்கம்,புலி ஆகியவை தனித்தனி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன..
ஒட்டகம்,யானை எல்லாம் தனியே அவர்களின் பாகனோடு நின்று கொண்டிருந்தன.
அங்கு வந்த சிறுவர்,சிறுமிகள் ஒட்டக சவாரியை விரும்வ..பாகனும்அதில் ஏறி வலம் வர ஒப்பு கொண்டான்.
சிறிது நேரம் கழித்து..ஒட்டகம் சற்று இளைப்பாறியது.
அப்பொழுது அருகே இருந்த மற்ற மிருகங்கள் ஒட்டகத்தை பார்த்து “நீ ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறாய்,உயரமான கழுத்து,அதில் பெரிய திமில் என்றுபார்க்க அருவருப்பாக இருக்கிறது"என்று கேலி செய்தன.
அப்பொழுது ஒட்டகம் “நண்பர்களே’ உங்களுக்கு என்னைப்பற்றி தெரியாது.நான் சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள் .
நாங்கள் பெரும்பாலும் பாலைவனத்தில் தான் வாழ்வோம். மிருக காட்சியிலும் இருப்போம்.
உணவும் நீரும் கிடைக்கும்போது அதை திமிலாக்கிகொள்வோம்.(திமிலில் கொழுப்பாக சேர்த்துக்கொள்வோம்)
உணவோ நீரோ கிடைக்காத காலத்தில் எங்கள் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட் ரஜனோடு நாங்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனைக் கலந்து நீராகவும் உணவாகவம் மாற்றிக்கொள்வோம்.
உணவு மட்டும் கிடைத்தால் போதும்,நீரின் தேவையில்லாமல் ஒரு மாத காலம் எங்களால் பயணம் செய்ய முடியும்.
உணவும்,நீரும் இல்லாமல் ஒரு வார காலம் இருப்போம்.
குளிர் காலத்தில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் எங்களால் இருக்கமுடியும். நீர் கிடைத்தால் 100 லிட்டெர் தண்ணீரை 10 நிமிடத்தில் குடித்து விடுவோம்.
இறைவன் எங்களுக்கு 50 ஆண்டுகள் வரை வாழ அருள் புரிந்திருக்கிறார்.
எங்கள் முன்னோர்கள் பெரும்பாலோர் பாலைவனத்தில் வாழ்ந்து வந்ததால் எங்களை “பாலைவனகப்பல்.." என்றும் கூறுவர்.
பாலைவனத்தில் வாழ்வதற்கேற்ப ஆண்டவன் எங்களை இப்படி படைத்திருக்கிறார்.என்னைப்போன்ற சிலர் தான் நகரங்களில் காணப்படுகிறோம்.
உருவத்தைக்கண்டு இகழக்கூடாது.காரணமில்லாமல் ஆண்டவன் எதையும் படைக்க மாட்டார்." என்றது
அதைக்கேட்ட மற்ற மிருகங்கள் அதை எள்ளி நகையாடுவதை நிறுத்திவிட்டு மரியாதையுடன் நடத்த ஆரம்பித்தன,.
1 comment:
அருமை...
Post a Comment