27- பிறரை குறைத்து மதிப்பிட கூடாது
ஒரு தோட்டத்தில் ஒரு எறும்பு புற்று இருந்தது.அதிலிருந்த எறும்புகள் பக்கத்திலிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தன.
மரத்திற்கு பக்கத்தில் ஒரு முசுக்கொட்டை செடி ஒன்று இருந்தது.அதில் ஒரு கூடு இருந்தது.அந்த கூட்டிற்குள் ஒரு புழு ஒன்று வாலாட்டிக்கொண்டிருந்தது..அது ஒரு பட்டுப்புழு.
எறும்பு கூட்டத்தில் ஒரு பெரிய எறும்பு புழுவைப்பார்த்து ‘எங்களைப்பார்,எத்தனை உயரமான மரத்தில் ஏறிச்செல்கிறோம்.ஆனால் உன்னால் ஒருபோதும் இவ்வளவு உயரத்திற்கு வரமுடியாது' என்று கேலி செய்தது.மற்ற எறும்புகளும் அதனை ஆமோதித்தன.
புழு அமைதியாக இருந்தது.இந்த புழுதான் நன்கு வளர்ந்து கூட்டுபுழு ஆகி பின் அழகிய பட்டுபூச்சி ஆகும்.இதனை அறியாத எறும்புகள் அந்த புழுவை கேலியும் கிண்டலும் செய்தபடி அந்த இடத்தை விட்டு சென்றன.
அடுத்த இரண்டு தினங்களில் அங்கு வந்த எறும்புகள் வெறும் கூட்டை மட்டும் பார்த்தன.அதைப்பார்த்த எறும்புகள் புழு கூட்டிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டன போலும் என்று எண்ணின.
அப்பொழுது ஒரு குரல் ‘எறும்பு நண்பர்களே’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. மரத்தின் உயரத்தில் அழகிய பட்டுபூச்சி சிறகடித்து நின்றது.பட்டுபூச்சி எறும்புகளைப்பார்த்து ,"இப்போது நான் உங்களை விட உயரமாக எதையும் பற்றிக்கொள்ளாமல் பறக்கிறேன்.உங்களால் இவ்வளவு உயரம்வரமுடியாது.நான் உங்களை கேவலப்படுத்தவில்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருக்கிறான். அந்த திறமைகளுக்காக நாம் மற்றவர்களை இகழக்கூடாது.அதை புரிந்து கொள்ளுங்கள்" என்றது.
எறும்புகளும் .அதனை கேட்டு தலை குனிந்தன.
No comments:
Post a Comment