28 - தோற்றத்தை கண்டு எடை போடக்கூடாது
ஒரு காட்டில் கரடி ஒன்று வாழ்ந்து வந்தது.ஒரு நாள் உணவு எதுவும் கிடைக்காமல் பசியால் அலைந்து திரிந்தது.
அப்போது ஒரு மரத்தின் மீது ..ஒரு தேன் கூட்டை கண்டது.அந்த தேன் கூட்டில் உள்ள தேனை குடிக்க எண்ணி அதன் அருகே சென்றது.
அப்போது வெளியே சென்று இருந்த தேனி ,ராஜா கரடி ஒன்று தேன் கூட்டிற்கு வருவதை பார்த்தது.
பார்த்ததும் அதன் அருகில் சென்றது.
கரடி அந்த தேனியை பார்த்து நான் இப்போது தேன் கூட்டிலுள்ள தேனை குடிக்கப்போகிறேன் என்றது.
உடனே தேனி தெரியும், இது எங்கள் வீடு, இதை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று கெஞ்சியது.
கரடி தேனியை பார்த்து ..’நீ எவ்வளவு சிறியவன்,நான் உன்னைவிட எவ்வளவு பெரியவன்,பலசாலியும் கூட தெரியுமா,உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது ‘ என்றது.
நிலைமையை உணந்த தேனி ..'எனக்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடுங்கள்நான் வீட்டிலுள்ள பொருட்களை தேன் கூட்டிலிருந்து எடுத்து சென்று விடுகிறேன்’ என்றது.கரடியும் அதற்கு சம்மதித்தது.
தேனி உடனே கூட்டிற்கு சென்று மற்ற தேனீக்களிடம் நடந்ததைக் கூறியது.மற்ற தேனீக்களும் உடனே கூட்டை விட்டு வெளியே வந்தன..அவை அனைத்தும் கரடியை கொட்ட தொடங்கின.கரடி தேனீக்கள் கொட்டியதால் வலியால் துடித்தது..பின் ஓடத்தொடங்கியது.தேனீக்களும் விடாமல் கரடியை துரத்தின.அவற்றிடமிருந்து தப்பிக்க கரடி பக்கத்திலுள்ள ஆற்றில் குதித்தது.
தேனீக்களும் கரடியை மன்னித்து அதனை விட்டுவிட்டன..உருவத்தில் சிறியது என கரடி நினைத்ததால் அதற்கு வந்தது வினை.நாமும் உருவத்தில் சிறியவனவற்றை பார்த்து அலட்சியம் செய்யக்கூடாது.
1 comment:
அருமை...
Post a Comment