ஒரு ஊரில் வெவ்வேறு மதத்தலைவர்கள் இருந்தார்கள்.ஒவ்வொரு மதத்தலைவர்களும் அவர்களுடைய மதக் கடவுளை உயர்வாக பேசி மற்ற மதக்கடவுள்களை தங்களுக்கு தெரியாது என்பது போல் பேசுவர்.
இதனால் இவர்களுக்குள் எந்த மதக்கடவுள் உயர்ந்தவர் என்ற சர்ச்சை வந்தது.
அனைவரும் இந்த சர்ச்சைக்கு ஒரு தீர்வு கிடைக்க அந்த ஊரைச்சேர்ந்த நீதிபதியிடம் சென்றனர்.
அவர்களது குறையை கேட்ட நீதிபதி தன் வேலையாட்களிடம் ஒரு ஆனையையும் 4 கண் பார்வை இல்லாதவர்களையும் அழைத்து வரச்சொன்னார்.
அவர்களிடம் நீதிபதி யானை ஒன்று உங்கள் எதிரே உள்ளது.அதை தொட்டுபார்த்து யானை எப்படி உள்ளது என்று சொல்லவேண்டும் என்றார்.
யானையின் காதுகளை தொட்ட முதல் நபர் முறம் போல் உள்ளது என்றான்.
யானையின் வயிற்றை தொட்ட இரண்டாம் நபர் சுவர் போல் உள்ளது என்றான்.
யானையின் கால்களை தொட்ட மூன்றாம் நபர் தூண் போல் உள்ளது என்றான்.
யானையின் வாலைத்தொட்ட நாலாவது நபர் துடைப்பம் போல் உள்ளது என்றான்.
உடனே நீதிபதி மதத்தலைவர்களிடம் பார்த்தீர்களா "யானை ஒன்று தான் ஆனால் ஒருவனுக்கு முறம் போலவும்,மற்றொருவனுக்கு சுவர் போலவும்,இன்னொருவனுக்கு தூண் போலவும், நான்காவது நபருக்கு துடைப்பம் போலவும் தோன்றியிருக்கிறது.
கடவுள் ஒருவர் தான்,அவரவர் பார்வையில் தான் வித்தியாசம் இருக்கிறது என்றார். "
இதைக்கேட்ட மதத்தலைவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பினர்.
No comments:
Post a Comment