கழுதை ஒன்று வழி தெரியாமல் காட்டிற்குள் வந்துவிட்டது. வரும் வழியில் பல மிருகங்கள் எதிரே பயத்துடன் ஓடி வந்தன.அவற்றில் ஒன்றான மானைப் பார்த்து' ஏன் அனைவரும் இப்படி பயந்து ஓடி வருகிறீர்கள்' என்று கேட்டது கழுதை
இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது.அதைக் கண்டு பயந்து ஓடுகிறோம் என்றது மான்.
சிங்கத்தை நினைத்தபடியே நடந்து சென்ற கழுதை ஆறு ஒன்றைப் பார்த்தது.
அதில் தண்ணீர் குடிக்கச்சென்றபோது ...வேட்டையாட வந்த சிலர் தாங்கள் வேட்டையாடிய ...புலி. சிங்கம்,மான் ஆகிய விலங்குகளின் தோல்களை பாறைகளின் மேல் உலர்த்தி வைத்திருந்தனர்.
அதைப்பார்த்த கழுதைக்கு ஒரு ஆசை வந்தது.உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்து போர்த்திக்கொண்டது.இப்போது அது பார்ப்பதற்கு சிங்கம் போலவே இருந்தது.மற்ற மிருகங்களும் கழுதையை சிங்கம் நினைத்து பயந்து ஓடின.இதைப் பார்த்த கழுதைக்கு கர்வம் அதிகமானது.
சிறிது தூரம் சென்ற கழுதை வழியில் ஒரு நரியை பார்த்தது.நரியும் பயந்துகொண்டே 'சிங்க ராஜா..நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன்.இனி நான் உங்கள் பக்கம் வரமாட்டேன்' என்றது.
இப்போது கழுதைக்கு சிங்கம் போல கர்ஜிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது.' ங்கே,,,ங்கே' என கத்தியது.உடனே நரிக்கு அது கழுதை எனத்தெரிய அது அதனை மதிக்கவில்லை.
"ஏய் கழுதையே நீ சிங்கத்தோல் போட்டாலும் உன் உண்மையான குரலை மாற்ற முடியாது' எனக்கூறியது நரி.இதனிடையே எல்லா மிருகங்களும் அங்கு வந்து கழுதையைக் கேலி செய்தன.
எப்போதுமே நாம் பிறரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது.நாம் ...நாமாகவே இருக்கவேண்டும்.
2 comments:
அதானே...? அருமை...
வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
Post a Comment