2- அறிவுடைமை
ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது பூனை ஒன்று வகுப்பில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டிருந்தது.ஆனாலும் ....ஆசிரியர் அதைப்பற்றி கவலைப்படாது பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.ஆனால் மாணவர்களின் கவனம் பாடத்தில் செல்லாமல்...பூனையின் மீதே இருந்தது.
அதனால் அவர்...அந்த பூனையை பிடித்து பக்கத்தில் இருந்த ஒரு தூணில் கட்டச்சொன்னார்.பூனையும் கட்டப்பட்டது.
அடுத்த நாள் முதல்..அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு செய்யக்கூடாது என பாடம் நடத்தும்போது தவறாமல் பூனை தூணில் கட்டப்பட்டது.
சில மாதங்கள் கழித்து ஆசிரியர் வெளியூர் சென்றுவிட வேறு ஒரு ஆசிரியர் வந்தார்..ஆனாலும் மாணவர்கள்...வகுப்பு ஆரம்பிக்கும் முன் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.
புது ஆசிரியர் வந்து....மாணவர்களிடம் ....பூனையை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டார்.
மாணவர்களும்...முந்தைய ஆசிரியர் தினமும் பூனையை தூணில் கட்டிவிட்டுத் தான் வகுப்பில் பாடத்தை நடத்துவார், என்றனர்.
புது ஆசிரியருக்கோ இது ஆச்சிரியத்தை தந்தது.பின்னர் அவர் மாணவர்கள் சொன்னதிலிருந்து ,பூனை வகுப்பில் பாடம் நடக்கும் போது இங்கும் அங்கும் நடந்தது தான் பூனையை கட்டி வைக்க காரணம் என்பதைபுரிந்து கொண்டார்.
பின் மாணவர்களிடம் அவர்களின் அறியாமையை விளக்கி...எந்த ஒரு செயலுக்கும்...அது ஏன் செய்யப்படுகிறது என்பதை அறிந்து செயல்படவேண்டும் எனவும்...அதை அறியாமல்....இயந்திரத்தனமாக...சிந்திக்காமல் நடக்ககூடாது என்று கூறினார்.
இதையே திருவள்ளுவர்'
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.
என்றார்.
இதற்கானப் பொருள்...'எந்த ஒரு பொருள் குறித்தும் எவர் எதைச்சொன்னாலும் (செய்தாலும்)ஆதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளாமல் உண்மை என்ன என்பதை ஆரய்ந்து தெளிவது தான் அறுவுடைமையாகும்.
2 comments:
அருமை... அருமை...
நன்றி திண்டுக்கல் தனபாலன்
Post a Comment