ஓரு அழகான குளம். 'குளத்தின் கரையில் இருந்து ஒரு பெரிய மரப்பொந்தில் எலி ஒன்று வசித்து வந்தது.அந்த எலிக்கு குளத்தில் வாழ்ந்து வந்த தவளையின் நட்பு கிடைத்தது. தினமும் அவை இரண்டும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்.
ஒரு நாள் எலி தவளை நீரில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்து தனக்கும் தவளை நீச்சல் கற்றுத் தரமுடியுமா?' என்று கேட்டது.
'சரி'என ஒப்புக்கொண்ட தவளை தன்னுடைய காலை எலியின் காலுடன் சேர்த்து
ஒரே கயிற்றினைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் இறங்கியது.
அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவர்களைப் பார்த்து தாக்க வந்தது. அதைப்பார்த்த தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுண்டெலியுடன் தண்ணீரில் மூழ்கியது.தண்ணீரில் மூழ்கிய எலி மூச்சு திணறி இறந்து போனது.இறந்த உடல்மேலே மிதந்த போது அதனுடைய கால்கள் தவளையையும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.
தண்ணீரில் எலி செத்துக் கிடப்பதைப்பார்த்த கழுகு ...அதைக்கொத்திக்கொண்டு பறந்தது.அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் கழுகின் பிடியில் சிக்கியது.
கழுகு தவளையயும் கொன்று தின்னது.
நாம் ஒருவரை நண்பனாக தேர்ந்தெடுக்கும் முன் ....அவர்கள் நமக்கு தகுதியானவர்களா என யோசித்து ஒட்டிக் கொள்ளவேண்டும்.
2 comments:
நட்பு ஆராய்தல் அதிகாரமும் உள்ளது...
ஆம்...வருகைக்கு நன்றி
Post a Comment