அந்த நீரோடையில் இருந்த தவளையை நண்பனாக்கிக்கொண்டு தன் ஆசையைக் கூறியது.பின் ஒருநாள் ' தவளையாரே'நான் அக்கரை செல்ல வேண்டும்.என்னை கொண்டுபோய் விடுகிறீர்ககளா' என்றது.
தவளையும்,' என் முதுகில் ஏறிக்கொள்,நான் அக்கரையில் விட்டு விடுகிறேன்' என்றது.
தேளும்,தவளையின் முதுகில் ஏறிக்கொள்ள, தவளை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.அப்போது தேள்,' நான் நிறைய பேரை கொட்டியிருக்கிறேன்,அவர்கள் வலியால் துடித்ததைக்கண்டு ரசித்திருக்கிறேன். ஆனால் இதுவரை ஒரு தவளையைக் கூட கொட்டியதில்லை.இப்போது கொட்டிப்பார்த்தால் என்ன? என்று எண்ணி தவளயின் முதுகில் கொட்டியது.ஆனால் தவளை பேசாமல் சென்றது.
உடனே தேள்,தவளையாரே...உனது உடலில் வலியே வராதா?' என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தை புரிந்துகொண்ட தவளை ; என் முதுகு வழவழப்பானது.அதனால் எனக்கு வலி தெரியாது.என் கழுத்து மென்மையானது,அங்கு வலி தெரியும்' என்றது.
முதுகில் இருந்து தவளையின் கழுத்துக்கு வந்தது தேள்.தேள் கொட்ட வந்ததை அறிந்த தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது.தேள் தண்ணீருக்குள் விழுந்து இறந்தது.
தனக்கு உதவிய தவளைக்கு கேடு நினைத்த தேள் அழிந்தது.
'கெடுவான் கேடு நினப்பான்' அதாவது ஒருவருக்கு தீங்கு செய்ய எண்ணுபவர்கள் தாங்களே அழிந்து போவார்கள்.
2 comments:
உண்மை...
நன்றி திண்டுக்கல் தனபாலன்
Post a Comment