வேடன் ஒருவன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றபோது,திடீரென சிங்கத்தின் கர்ஜனை அவனை பயந்து ஓட வைத்தது.
அப்போது ' மனிதா....பயப்படாதே உன் வலப்பக்கம் பார்....யாரோ விலங்குகளைப் பிடிக்க வைத்த கூண்டில் நான் மாட்டிகொண்டுவிட்டேன்.கூட்டைத் திறந்து என்னை விடுவிக்கிறாயா?' என்றது.
வேடன் சொன்னான்,'சிங்கமே...உன்னை விடுவித்தால் வெளியே வந்து என்னை உணவுக்காக நீ கொன்று விடுவாயே.'
'கண்டிப்பாக மாட்டேன்.என்னை காப்பற்றும் உன்னைக் கொல்வேனா...மாட்டேன் ' என சிங்கம் சொல்ல ..வேடன் கூண்டைத்திறந்து சிங்கத்தை விடுவித்தான்.
வெளியே வந்த சிங்கம் ..வேடன் மீதுபாயத்தயாரனது.'சிங்கமே நீ செய்வது நியாயமா என்றான்' வேடன்.
'மனிதனை அடித்துக் கொல்வது என் குணம்.நான் வெளியே வர நான் சொன்னதை நீ நம்பியது உன் தவறு' என்றது.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து நரி ஒன்று அங்கு வந்தது.
என்ன விஷயம் என்று கேட்டது. வேடன் நடந்ததைக்கூறி நியாயம் கேட்டான்.சிங்கமும் நரி சொல்வதை தான் கேட்பதாகக் கூறியது.
உடன் நரி ' முதலிலிருந்து நடந்ததைக் கூறுங்கள்'நீங்கள் எந்த கூண்டில் எப்படி இருந்தீர்கள்' என சிங்கத்திடம் வினவ , சிங்கம் கூண்டிற்குள் சென்று ' இங்கே இப்படித்தான் இருந்தேன் என்றது.'
சிங்கம் கூண்டிற்குள் போனதும் ,நரி உடனே கூண்டை மீண்டும் பூட்டிவிட்டது.பின் சிங்கத்திடம் ' என்னை மன்னியுங்கள்.நீங்கள் உங்களை காப்பற்றுபவனுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறி கொல்ல நினைப்பது நம்பிக்கை துரோகமாகும்.ஆகவே தான் இப்படி நடந்துகொண்டேன்' என்று சொல்லிவிட்டு வேடனிடம் உதவி செய்யும்போது அந்த உதவி நமக்கு தீங்கு விளைவிக்குமா என்று ந ன்கு யோசித்துவிட்டு செய்யவேண்டும். என்று சொல்லி விரைந்தது நரி,
நன்றி மறந்த சிங்கமும் தன் தவறை எண்ணி கூண்டிற்குள் இருந்து வருந்தியது..
2 comments:
நீதிக்கதை அருமை...
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தன்பாலன்.
Post a Comment