அந்த காட்டிற்குள் ....இரு அணில்கள் மரத்திற்கு மரம் ஆடி..ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.
அதில் ஒரு அணில் இறைவன் மீதி பக்தி அதிகம் கொண்ட அணில்.எது நடந்தாலும் ....அது தான் வணங்கும் இறைவனின் செயலாகும் என்றும்...தன்னை எப்போதும் எந்த விபத்து வந்தாலும் அவன் காப்பாற்றி விடுவான் என்றது.
ஆனால் மற்றொரு அணிலோ இதைக்கேட்டு சிரித்தது.'இறைவன் என்பவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை..' என்றது.
'உனக்கு ஒரு ஆபத்து வந்து அதிலிருந்து நீ தப்பினால் தான் ..உனக்கு புத்தி வரும் என்றது பக்தி அணில்.
பிறகு இரண்டும் ஒரு மரத்தில் ஏறி அதன் ஒரு கிளையில் அமர்ந்து தங்கள் முன் கால்களில் அம்மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பறித்து த் தின்று கொண்டிருந்தன.அப்போது திடீரென அந்த கிளை முறிந்து கீழே விழுந்தது.அதனுடன் அணில்களும் விழுந்தன.
நம்மை அனைத்து கிளைகளும் தாங்குமே..இது எப்படி முறிந்தது' என வியந்தன.
அப்போது பக்தி அணில் மேலே பார்க்க அவை அமர்ந்திருந்த முறிந்த கிளையை ஒட்டி இருந்த கிளையில் ஒரு பாம்பு ஒன்று அமர்ந்திருந்தது.கிளை மட்டும் முறியாமல் இருந்திருந்தால் அந்த பாம்பு அணில்களை விழுங்கியிருக்கும்.
பாம்பைக்காட்டி...மற்ற அணிலுக்கு இறைவனே கிளையை முறியவைத்து நம்மை காத்தான் இறைவன் என்றது பக்தி அணில்.
அதை உணர்ந்து கொண்ட மற்ற அணிலும் அன்று முதல் இறைவனை வணங்க ஆரம்பித்தது.
2 comments:
நல்லதொரு நீதிக் கதை. அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது!
நன்றி
Post a Comment