அந்த ஊரில் ஆலமரம் ஒன்றில் ஆண் காகமும்,பெண் காகமும் வசித்து வந்தன.
அந்த ஆலமரத்தின் கீழே பெரிய பொந்து ஒன்று இருந்தது.அதில் ஒரு பாம்பு வசித்து வந்தது.பெண்காகம் தனது கூட்டில் முட்டைகள் இட்டு குஞ்சு பொரிக்கும்.
ஆண்காகமும் பெண் காகமும் இரைத்தேடி செல்லும் நேரம் பொந்தில் இருக்கும் பாம்பு மரத்தில் ஏறி முட்டைகளைத் தின்றுவிடும்.
நீண்ட நாட்கள் முட்டைகள் எப்படி காணாமல் போகிறது என காகங்கள் அறியவில்லை.
ஒருநாள் பாம்பு முட்டைகளை சாப்பிடுவதை பெண் காகம் பார்த்துவிட்டது.
பின் ஆண் காகத்திடம் அது முறையிட ..பாம்பை எப்படி ஒழிப்பது என அவை யோசித்தன.
பின் ஒரு தீர்மானத்திற்கு அவை வ்ந்தன.
அந்த நாட்டு இளவரசி நீராடும் குளத்திற்கு வந்தன.அவள் தன் விலையுயர்ந்த ஆபரணத்தை கழட்டி கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.
ஆண் காகம் முத்துமாலையை கொத்திக்கொண்டு ஓடியது. இளவரசியுடன் வந்த காவலர்கள் காகத்தை துரத்திக்கொண்டு வந்தனர்.
காகம் அந்த முத்துமாலையை பாம்பு வசிக்கும் பொந்தில் போட்டதை பார்த்த காவலர்கள் புற்றை இடித்து நகையை தேடும்போது பாம்பு வெளியே வர அதை அடித்துக் கொன்றுவிட்டு நகையைஎடுத்து சென்றனர்.
அதன் பிறகு அந்த இரண்டு காகங்களும் பயமில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தன.
நமக்கு துன்பம் வரும்போது.கலங்காது. யோசித்தோமானால் அந்த துன்பம் நீங்க வழி பிறக்கும்.
No comments:
Post a Comment