தந்தையும்,அவரது பத்து வயது மகனும் அவர்களிடமிருந்த குதிரைக்குட்டி ஒன்றை விற்பதற்காக சந்தைக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழிப்போக்கன் ஒருவன் ...'குதிரைக்குட்டியை ஓட்டி செல்கிறீர்களே அதன் மீது நீங்கள் யாராவது ஏறிச்செல்லலாமே' என்றான்.
உடன் தந்தை தன் மகனை குதிரை மீது ஏற்றினார்.சிறிது தூரம் சென்றதும் வேறு ஒரு வழிப்போக்கன்,' வயதான நீங்கள் நடக்கிறீர்கள்...சிறுவன் குதிரையின் மேல் உட்கார்ந்துள்ளானே?' என்றார்.
உடனே தந்தை சிறுவனை இறக்கிவிட்டு ...தான் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார்.
சிறிது தூரம் சென்றதும்....அந்த வழியே வந்த வழிப்போக்கன் 'திடமாக இருக்கும் நீங்கள் குதிரையில்...பாவம் சிறுவன் நடந்தா..;என கேட்டான்,
'சரி' என இம்முறை தந்தை,மகன் இருவரும் குதிரையின் மீது ஏறிக்கொண்டனர்.சிறிது தூரம் சென்றதும் ஒருவன் ;பாவம் குதிரைக்குட்டியின் மீது இரண்டு தடியன்கள் பயணம் செய்கிறார்கள் என்றான்.'
இதைக்கேட்ட தந்தையும், மகனும் குதிரையிலிருந்து இறங்கி வழக்கம் போல நடந்து சென்றனர்.
அப்போது மகன் கேட்டான்' ஏம்பா...நம்ம குதிரை..நாம் அதனுடன் நடந்தோ...இல்லை ஏறியோ எப்படி வேண்டுமானாலும் செல்லலாம்.அதை
விமர்சிக்க இவர்கள் எல்லாம் யார்? என்றான்.'
அப்போதுதான் தந்தையும் உணர்ந்தார்.....யார் எப்படி நம்மை விமர்சித்தாலும் பரவாயில்லை ...நம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொண்டால் போதுமென.
இவர்கள் மனதின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டது போல குதிரையும் சந்தோஷத்தில் கனைத்து,அவர்களுடன் சேர்ந்துநடக்க ஆரம்பித்தது.
2 comments:
அருமை...
நனறி திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment