10- நம்பிக்கை
Thursday, May 26, 2022
10. நம்பிக்கை
9.யானையும் பன்றியும்...
9- யானையும்..பன்றியும்
கோயில் யானை ஒன்று அந்த ஊரில் இருந்த நதி ஒன்றில் குளித்துவிட்டு ..நெற்றியில் திரு நீறு மணக்க சுத்தமாக வந்து கொண்டிருந்தது.
ஒரு சிறிய பாலத்தை அது கடக்க முயன்றபோது ...அதன் எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.
யானை பாலத்தின் ஓரத்தில் ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டது
அதைக்கண்ட பன்றி,,,தனக்கு பயந்து யானை வழி விட்டது என்று தன்னை பற்றி மி கவும் ஆணவம் கொண்டது,.
அத்துடன் நில்லாது ' யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது ' என்று ஊர் முழுவதும் சொல்லி விட்டது.
இதை கேட்ட மற்றொரு யானை ஒன்று கோயில் யானையிடம் சென்று, 'உண்மையிலே நீ பன்றியைப்பார்த்து பயந்து விட்டாயா' என்று கேட்டது.
அதற்கு கோயில் யானை சொன்னது'நான் குளித்து சுத்தமாக இருந்தேன்,பன்றியின் சேறு என் மீதுவிழுந்துவிடக்கூடாதே என்று ஒதுங்கினேன்.'
'நான் பன்றியின் மீது ஏறி அதனை துவம்சம் பண்ண்யிருக்கலாம்.அதற்கு ஒரு நொடி கூட ஆகாது.ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும் 'என்றது.
ஆணவக்காரர்களைக்கண்டால் ஒதுங்கி விடவேண்டும் என கேள்வி கேட்ட யானை உணர்ந்தது.
நாமும் ஆணவத்துடன் செயல் படக்கூடாது.அதே நேரம் ஆணவம் கொண்டவரிடம் இருந்து விலகி விடவேண்டும்.
Sunday, May 22, 2022
8. ' முயன்றால் முடியாதது இல்லை'
கந்தன் அனைத்துப் பாடங்களிலும் எப்போதும் குறைந்த மதிப்பெண் பெற்று வந்தான்.
அந்த முறையும் அப்படித்தான்.
அதனால் அவனது அப்பா கோபித்துக்கொள்ள..அழுதுகொண்டே தன் அறைக்குள் வந்து அமர்ந்தான்.
அப்போது அறையின் மூலையில் ஒரு சிலந்தி...வலை பின்னிக்கொண்டிருந்தது.அது அவனது கவனத்தை ஈர்க்க அதையே பார்த்துகொண்டிருந்தான்.
அது வட்டமாக சுவரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தன் எச்சிலால் வலை பின்னிக்கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் அறுந்தது. அதை சரி பண்ணிவிட்டு மேலும் தொடர்கையில் மற்றொரு முனை அறுந்தது.
இப்படி தொடர்ந்து அறுந்து கொண்டிருந்தாலும் தன் முயற்சியை விடாது அடுத்த
அரை மணிநேரத்தில் அது வலையை பின்னி முடித்து நடுவில் சென்று அமர்ந்தது.
அதை பார்த்ததும் மகிழ்ச்சியால் அவன் கை தட்டினான்.
அவன் பின்னால்..அவனுக்கே தெரியாமல் நின்றுகொண்டிருந்த அம்மா..'கந்தா..பார்த்தாயா..பல முறை வலைஅறுந்தும் ..தன்னால் முடியாது என்று விட்டுவிட்டு போகவில்லை சிலந்தி.நேரத்தை பற்றி கவலைப்படாமல் பல முறை முயன்று தன் வேலையை செவ்வனே முடித்துவிட்டது.அதற்கு காரணம் அதனுடைய விடாமுயற்சியே.கடவுள் ..அனைவருக்கும் மூளையை கொடுத்துள்ளான்..அதை சரியாக பயன்படுத்தி..விடாமல் முயன்று படித்தால் உன்னாலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கமுடியும்.
சிலந்தியின் விடாமுயற்சி உனக்கு ஒரு பாடமாக அமையும்' என்றாள்.
அடுத்து வந்த அனைத்து பாடங்களிலும் கந்தன் முதல் மதிப்பெண் பெற்றான் என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டுமா..என்ன?.
Friday, May 20, 2022
7 - அன்னமும்..காகமும்
7 - அன்னமும்...காகமும் -
அந்த ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரசமரம் இருந்தது.அதில் அன்னம் ஒன்றும்...காக்கை ஒன்றும் நண்பர்களாக வசித்து வந்தன.
ஒருநாள் கடும் வெயிலில்...வேடன் ஒருவன் களைப்புடன் அங்கு வந்து மர நிழலில் தன் வில்..அம்பு ஆகியவற்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்து உறங்கினான்.
ஆனால் சிறிது நேரத்தில் வெயில் ஏற.. வெயில்அவன் முகத்தில் விழுந்தது.
வாயைத்திறந்து கொண்டு அசதியில் தூங்கும் அவன் மீது வெயில் விழுவதைப்பார்த்து பரிதாபப் பட்ட அன்னம் தன் இறக்கைகளை நன்றாக விரித்து அவன் முகத்தில் நிழல் விழுமாறு செய்தது.
அதேசமயம் பிறர் நலனை சற்றும் எண்ணாத குணம் கொண்ட காகம் அவனது திறந்த வாயில் எச்சத்தை விட்டு பறந்து சென்றது.
எழுந்து உட்கார்ந்த வேடன் ..தன் மேலே சிறகு விரித்துக் காணப்பட்ட அன்னம்தான் எச்சமிட்டுவிட்டது என எண்ணி ..சற்றும் சிந்திக்காது அம்பை எய்தி அதைக்கொன்றான்.
குணம் கெட்ட காகத்துடன் கூடா நட்பு கொண்டிருந்ததாலே அன்னம் உயிர் நீக்க நேர்ந்தது.
நாமும் நமது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
கூடா நட்பினை தவிர்க்கவேண்டும்.
Thursday, February 18, 2021
6. பூட்டும்...சாவியும்.. (நீதிக்கதை)
6 - பூட்டும்-சாவியும்
வீட்டின் வாசலில் நின்றிருந்த ராமனாதன் தன்மனைவியிடம் 'பூட்டைத் திறக்கும் சாவியைக் கொடு என்றார்'. ராமனாதனின் மனைவியோ சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்து தன் கைப்பையை நோண்டிக் கொண்டிருந்தாள்.
சாவி கிடைக்காததால்...பக்கத்தில் இருக்கிற வீட்டிலிருந்து ஒரு சுத்தியை வாங்கி பூட்டை உடைக்க ஆரம்பித்தார்.சுத்தியால் வாங்கிய அடி பூட்டிற்கு மிகவும் வலித்தது.அந்நேரம் சாவியை மனைவி கண்டுபிடித்து விட...அதனால் பூட்டை எளிதாக திறந்து விட்டார் ராமனாதன்.
அப்போது சுத்தியல் சாவியை பார்த்து . ' பூட்டின் தலையில் என்னை அவ்வளவு பலமாக அடித்தவர் உன்னை உபயோகித்து உடனே திறந்துவிட்டாரே.....அது எப்படி 'என்றது..
அதற்கு சாவி சொன்னது...' நீ பூட்டை திறக்க அன்புடன் செயல்படாது வன்முறையை உபயோகித்து அதன் தலையில் அடித்தாய்,அதனால் அது திறக்கவில்லை,ஆனால் நானோ அன்பாக அதன் இதயத்தில் நுழைந்து திறக்க முயற்சித்தேன்,என் அன்புக்கு கட்டுபட்டு அது திறந்தது.'
எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும் ..தன் இதயப்பூர்வமான அன்பினைச் செலுத்தினால் ...அவர்களை மாற்றிவிட முடியும் என்பதை உணரவேண்டும்.
Tuesday, February 9, 2021
5. பேராசை... (நீதிக்கதை)
ஓட்டை வாளியில் தண்ணீர் ஊற்றினால் எப்படி நிற்காதோ..அது போல திருப்தியற்ற மனம் உள்ளவர்களுக்கு எத்தனை சந்தோஷம் வந்தாலும் அது தங்காமல் அவர்கள் மனம் சோக மயமாகவே இருக்கும்.
குமரனின் மாமா கந்தசாமி...குமரனுக்கு சொத்துகளை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.
அதனால் மிகவும் சோகமாக இருந்த குமரனிடம் ' உன் மாமாவிற்கு வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.வயது மூப்பின் காரணமாகவே இறந்துவிட்டார்.மரணம் இயற்கையல்லவா..ஆனால் அதேநேரம் அவர் அவரது சொத்துக்களை உனக்கு எழுதி வைத்ததற்காக சந்தோஷப்படு" என்றான்ஒரு நண்பன்.
'என் சோகம் உனக்கு தெரியாது...இப்படித்தான் போன வாரம் என் சித்தப்பா பத்து லட்சம் சொத்தை என் பெயருக்குஎழுதி வைத்துவிட்டு அமரராகி விட்டார்
உனக்கு தெரியாது.' பணக்காரர்களக இருந்து என் மாமாவும் சித்தப்பாவும் இறந்துவிட்டார்கள்.இனிமேல் என் பேரில் சொத்துஎழுதிவைக்க உறவு யாருமில்லை' என்றான்
.ஆசைக்கு அளவு வேண்டும். பேராசை கொண்டவன் எப்போதும் திருப்தி அடையமாட்டான்.
எப்போதும் திருப்தி அடையாதவன் எந்நாளும் சந்தோஷமாக இருக்கமுடியாது.
Friday, February 5, 2021
4.ஆணவம் வேண்டாம் ...(நீதிக்கதை)
4- ஆணவம் வேண்டாம்
ஓரு ஊரில் மெத்தப் படித்தவன் ஒருவன் இருந்தான்.மற்றவர்கள் எல்லாம் அவனைவிட ஏட்டுக்கல்வியினை குறைவாகவே படித்தவர்கள்.அதனால் அவனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் உண்டு.அதனால் அவன் அனைவரையும் அலட்சியம் செய்து வந்தான்.
அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு துறவி வந்தார்.ஊர் மக்கள் அவரை வரவேற்று..வணங்கி மகிழ்ந்தனர்.
அவரைக்காண அந்த அறிவாளியும் வந்தான்.அவனைப்பற்றி துறவி முன்னரே கேள்விபட்டிருந்தார். அவருக்கு முன்னால் கால் மீதுகால் போட்டு அமர்ந்து ஆணவத்துடன் ...'உங்களை மக்கள் மதிக்கிறார்கள்' ஆனால் உண்மையில் உங்களை விட நான் அதிகம் அறிந்தவன்' என்றான்.
அதற்கு துறவி..' இந்த உலகில் அனைத்தும் அறிந்தவன் எவனும் இல்லை.கற்றது கைம்மண் அளவு தான்.உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.நமது அறிவு என்பது ஓர் எறும்பு போல ...நமக்கு தெரியாத விஷயங்கள் யானையைப் போல....யானையின் காலுக்கு அடியில் கிடக்கும் எறும்பால்....என்றுமே யானையை முழுமையாக பார்த்து விட முடியாது.யானையின் ஒரு பகுதியைத் தான் பார்க்கமுடியும்.எறும்பின் பார்வையைப் போல உங்களது அறிவு கூர்மையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை யானையை போல . இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு என்று வருகிறதோ அன்று தான் உங்கள் ஆணவம் குறையும்' என்றார்.
சிறிது யோசித்த அறிவாளி,துறவி சொன்னது உண்மை என உணர்ந்து...அவரிடம் மன்னிப்பு க்கேட்டான். அன்று முதல் ' அனைத்தும் தனக்கு தெரியும்' என்ற ஆணவத்தைவிட்டான்.
உலகத்தில் எல்லாம் அறிந்தவன் என்று யாருமில்லை என்பதைஉணர்ந்தால் ..யாருக்கும் ஆணவம் ஏற்படாது.






