வனஜாவும் கோபத்தில் நாங்கள் அலுவலகத்திற்கு கிளம்பும்போது இப்படி அபசகுனமாக உடைத்துவிட்டாயே.செய்யறவேலையில் கவனம் வேண்டாம்.இப்ப ' நீ உடைத்த கண்ணாடி பாத்திரத்துக்கு இந்த மாதம் ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்ளப்போகிறேன்' என்று கோபமாக கத்தினாள்.
கை தவறிப்போச்சும்மா...மன்னிச்சிடுங்க' என்றபடியே அவள் காலில் விழுந்தாள்.விமலா.
சரி விடு வனஜா .இதைப்போய் பெரிசு பண்ணாதே.பாவம்...தெரியாமத்தானே நடந்துபோச்சு.மன்னித்துவிடு,மனுஷனுக்கு மன்னிக்கும் குணம் வேண்டும்..அவளுக்கு சம்பளத்திலிருந்து ஐம்பது ரூபாய் பிடிக்காதே.என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினான்..
வனஜாவும் அவன் சொல்வதைக்கேட்டு விமலாவிடம் இனிமேல் கவனமாக இரு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
முந்தின நாள் அலுவலகத்தில் இவன் செய்த ப்ராஜெக்ட் ஒன்றில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட ..அதனால் அலுவலகத்தில் பல ஊழியர்களின் சில மணிநேர உழைப்பு வீணானது.மேலதிகாரி என்ன சொல்வாரோ? என பயந்தபடி அவரைப்பார்த்து' சாரி சர்' என்றான்.
உடன் அவர் ' இட் ஈஸ் ஆல்ரைட்...பிரணவ்...தெரிஞ்சா தப்பு பண்ணின? தெரியாமத்தானே நடந்துபோச்சு.இதைக் கூட மன்னிக்கலைன்னா அப்புறம் எது மனுஷத்தனம்..? என்று சர்வ சாதாரணமாக சொல்லிச்சென்றது நினவிற்கு வந்தது.
சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும் வனஜாவிடம் நடந்ததைக்கூறினான்.அவளும் இனிமேல் நான் விமலாவிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருக்கிறேன் என்று கூறினாள்.
No comments:
Post a Comment