20 - நேர்மையே வெல்லும்
வெகு காலத்துக்கு முன் மதுரைக்கு அருகே ஒரு அரசன் ஆண்டு வந்தார்.அவருக்கு வாரிசுகள் இல்லை என்பதால் தனக்கு பிறகு தன்னைப் போல் நீதியும் நேர்மையும் தவறாத ஒரு இளைஞனை கண்டுபிடித்து அவனை அரசனாக்க வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி அரசர் நாட்டிலுள்ள வீரமிக்க இளைஞர்களை அழைத்து அவர்களுக்கு வில் போட்டி,வாள்போட்டி மற்றும் வாய் மொழி கேள்விகள் என்று பல போட்டிகள் வைத்து கடைசியில் பத்து இளைஞர்களை தேர்ந்தெடுத்தார்.
அவர்களிடம் தனித்தனியாக ஒரு செடியின் விதையை கொடுத்தார்.இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து பெரிய செடியாக்கி ஆறு மாதம் கழித்து என்னிட ம்கொண்டு வரவேண்டும் .இதில் வென்ற ஒருவரே என்னுடைய வாரிசாக அறிவிக்கப்படுவர் என்று கூறினார்..
ஒவ்வொருவரும் விதையை வீட்டிற்கு எடுத்து சென்று தொட்டியில் வைத்து வளர்க்க ஆரம்பித்தனர்.பாண்டியன் என்று பெயருடைய ஒருவனுக்கு அவன் போட்ட விதை வளரவில்லை..எவ்வளவு முயன்றும் விதை போட்ட இடத்தில் ஒன்று ம்வரவில்லை.
மற்றவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்ததில் அவர்களுடைய தொட்டியில் பெரிய செடிகளாக வளர்ந்து இருந்தன..அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
'வருவது வரட்டும். அப்படியே தொட்டியை அரசனிட ம்கொண்டு போய் காண்பிப்போம் தண்டனையை ஏற்றுக்கொள்வோம் ' என்ற முடிவோடு அரண்மனை சென்றான்.
அரசர் எல்லோருடைய தொட்டிகளையும் பார்த்துவிட்டு பாண்டியன் தான் வெற்றிபெற்றவன் என்று கூறினார்.
மீண்டும் அரசர் சொன்னது ‘நான் எல்லோருக்கும் வெந்நீரில் போட்டுஎடுத்த காய்ந்த விதையைத்தான் கொடுத்தேன்.அப்படிப்பட்ட விதை எப்படி முளைக்கும்.
பாண்டியனைத்தவிர மற்றவர்கள் அதனை மாற்றி வேறு விதையை போட்டு வளர்த்திருக்கிறார்கள்.ஆனால், நேர்மையாக இருந்த பாண்டியன் தான் என்னுடைய வாரிசாக நியமிக்கப்படுகிறார்' என்று கூறினார்.
நேர்மையே வெல்லும்..
No comments:
Post a Comment