திண்டுக்கல் என்ற ஊரில் மாரியப்பனும் அவனது தந்தையும் வாழ்ந்து வந்தனர். மாரியப்பன் தன் வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் விற்று பிழைத்துவந்தான்.
மாரியப்பன் தந்தைக்கு வயதாகிவிட்டதால் அவரால் அவனுக்கு ஒன்றும் உதவி செய்ய முடியவில்லை.அவர் தான் சிறுக சிறுக சேர்த்துவைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்தை அந்த ஊரில் அவரது நண்பரும் கணக்கு பிள்ளையுமான தாமோதரனிட ம்கொடுத்து கூடவே ஒரு கடிதமும் கொடுத்தார்.அந்த கடிதத்தில், ‘நீ விரும்பியதை என் மகன் அவனுடைய தொழிலுக்கு தேவை ஏற்படும்போது கொடு'என்று எழுதியிருந்தது.இந்த லெட்டரின் ஒரு நகலை மகனிடமும் கொடுத்திருந்தார்..
சில மாதங்களில் தந்தை இறந்துவிட மாரியப்பன் கணக்குபிள்ளையான தாமோதரனிடம் அப்பா கொடுத்த பணத்தை தன்னுடைய தோட்டத்தை சீரமைக்கவேண்டும் என்று கேட்டான்.அவர் அவனிட ம்ரூபாய் 25000/- மட்டுமே கொடுத்தார்.மாரியப்பன் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.இது நியாயமாக இல்லாததால் மாரியப்பன் இந்த வழக்கை தனக்கு தெரிந்த அந்த ஊர் நீதிபதியிடம் எடுத்து சென்றான்.
நீதிபதி தாமோதரனிடம் நீ மாரியப்பனுக்கு எவ்வளவு கொடுக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.அவர் ரூபாய் 25000/- என்று கூறினார்.தந்தை கொடுத்துள்ள லெட்டரை பார்த்துவிட்டு நீதிபதி தாமோதரனிட நீ எவ்வளவு எடுத்துக்கொள்ள விரும்புகிறாய் என்று கேட்டார்.அதற்கு தாமோதரன் ரூபாய் 75000/- என்றார்.
தந்தை கொடுத்த லெட்டரில் ‘ நீ விரும்பியதை கொடு’என்று எழுதியிருந்ததால்,அதன் படி நீ எடுத்துக்கொள்ள விரும்பியதுரூபாய் 75000/-அதுவே நீ விரும்பியத்தொகையாகும் ஆகவே ரூபாய் 75000/-ஐ மாரியப்பனிடம் கொடுத்துவிட்டு நீ ரூபாய் 25000/-ஐ எடுத்துக்கொள் என்று கூறி வழக்கை முடித்தார்..
No comments:
Post a Comment