17 - சோம்பித் திரியேல்
முருகன் என்ற ஒருவன் மதுரை அருகே நத்தம் என்ற கிராமத்தில் தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு சோம்பேறி.ஒரு வேலையும் செய்யமாட்டான்.உண்பதும் தூங்குவதுமாக அவனுடைய பொழுது கழிந்தது.
அவனது பெற்றோர் அவனை எப்படியாவது திருத்தவேண்டுமென்று அவனை ஒரு வைத்தியரிடம் அழைத்து சென்றனர்.வைத்தியர் அவனுக்கு ஒரு பாட்டில் நிறைய பொடி ஒன்று கொடுத்தார். மேலும் அவனிடம் முருகா உனக்கு எப்பொழுது வேர்க்கிறதோ அப்பெல்லாம் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிடு.ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடவேண்டும்.உடம்பில் இருக்கும் எல்லா வியாதிகளும் போய்விடும் என்றார்.
அந்த பொடியை வாங்கிகொண்டுவந்த முருகனுக்கு அதை சாப்பிட்ட பின்பும் ஒரு குணமும் தெரியவில்லை.அவனது பெற்றோர் அவனிடம் "நீ ஏதாவது வேலை செய்யவேண்டும்” அப்பொழுதுதான் வேர்க்கும் ‘என்றார்கள்.
அவனும் வீட்டில் துணிதோய்ப்பது,தோட்டவேலை செய்வது,கடைகளுக்கு செல்வது என்று எல்லா வேலைகளையும் செய்தான்.வைத்தியர் கொடுத்த பொடியும் கொஞ்சம் குறைந்தது.அவன் சுறுசுறுப்பானான்.
பின்னர் வைத்தியரிடம் சென்று நான் நீங்கள் கொடுத்த பொடியை முழுமையாக சாப்பிடவில்லை.ஆனால் நன்றாக குணமடைந்துவிட்டேன் என்றான்.
அதற்கு அவர் ‘நீ மருந்தால் குணமடையவில்லை’சுறுசுறுப்பாக நீ வேலை செய்ததால் குணமடைந்துவிட்டாய்.மேலும் நான் கொடுத்தது மருந்து இல்லை வெறும் துளசியும் வெல்லமும் சேர்ந்ததுதான்' என்றார்.
நாமும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருந்தால் நோயின்றி வாழலாம்.
No comments:
Post a Comment