15- பகைவனுக்கு உதவ வேண்டும்
ஒரு பெரிய காட்டில் சிங்கம்,புலி கரடி போன்ற மிருகங்களும், மான்,குரங்கு போன்ற சிறிய மிருகங்களும் ஒற்றுமையாக வழ்ந்து வந்தன.
அந்த காட்டில் ஒரு சிங்கம் மட்டும் கர்வத்துடன் யாருக்கும் அடங்காமல் இருந்தது.இதனுடைய இந்த குணத்தால் இது தனிமை படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலாவி வந்தது.
நாளடைவில் அந்த காட்டிலுள்ள மான்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.இந்த சிங்கம் தான் மான்களை வேட்டையாடி தனக்கு இரையாக்கிகொண்டிருந்தது.
ஒருநாள் ஒரு அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதை போன்று சப்தம் கேட்டது.மான்கள் கூட்டம் அங்கு போய் பார்த்தபோது சேறும் சகதியும் நிறைந்த ஒரு குழியில் முதலை ஒன்றுடன் சிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்தன.
எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக இந்த முரட்டு சிங்கத்தை காப்பாற்றக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.
ஆனால் குரங்குகளும்/ மான்களும் எப்படியாவது சிங்கத்தை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி குரங்குகள் மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை கீழே போட மான்கள் அதை எடுத்து சிங்கம் உள்ள குழியில் போட்டன.சிங்கமும் கொடியை கவ்வி பிடித்துக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று கூறிக்கொண்டு மேலே வந்தது.
தன்னை முதலையிடமிருந்து காப்பாற்றிய மான்களுக்கும் குரங்குகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது.தான் மான் இனத்தை வேட்டையாடியும் அதை பொருட்படுத்தாமல் மான்கள் காப்பாற்றியது கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.
இனிமேல் நான் எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வேன்,தொந்தரவு செய்யமாட்டேன் என உறுதி பூண்டது.
1 comment:
அருமை...
Post a Comment