ஒரு நதியின் ஒரு பக்கம் செல்வம் மிகுந்த நகரமும், மறுபக்கம் ஒரு செழிப்பான கிராமமும் இருந்தது.
அந்த கிராமத்தில் ஒரு பால்காரன் இருந்தான்.
அவன் தன் பசுக்களிலிருந்து பாலைக் கறந்து படகின் மூலம் நதியைக் கடந்து நகரத்திற்குக் சென்று பால் விற்பனை செய்து வந்தான்
அவன், எப்படியாவது விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என எண்ணினான்.அனவே, பாலில் பாதி தண்ணீரைக் கலந்து விற்றான்.
கொஞ்ச நாளில் அவனது வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
பால்காரன், நகரத்திற்குச் சென்று, பணத்தை வசூலித்துக் கொண்டு,திருமணத்திற்கான பொருள்கள்,நகைகள், துணிமணிகள் வாங்கிக் கொண்டு படகில் ஏறி தன் கிராமத்திற்கு வந்தான்
நதியில்பாதி தூரம் வந்த போது, படகு பாறை ஒன்றில் மோதி,அவன் வாங்கி வந்த பொருள்கள் பாதி நதியில் வீழ்ந்து மூழ்கியது.
மீதம் கிடைத்த பொருள்களுடன் அவன் நீந்தி தன் கிராமம் வந்து சேர்ந்தான்.
கோவிலுக்குச் சென்று, "இறைவா! எனக்கு ஏன் இப்படி நடந்தது" என அழுதான்.
அப்போது இறைவன் அவன் முன் தோன்றி, "நீ மோசடி செய்து, பாலில் பாதி தண்ணீரைக் கலந்து விற்றாய்,அந்தத் தண்ணீரின் விலையுள்ள பாதிப் பொருள்கள் நதியின் தண்ணீரோடு போய்விட்டன" என்றார்
மோசம் செய்தால் மோசம் அடைவோம் என அவன் உணர்ந்தான்
4 comments:
காலத்திற்கேற்ற கதை குழந்தைகளுக்கு..அருமை அம்மா.
பேராசை பெருநட்டம்.
நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
// கலியபெருமாள் புதுச்சேரி said...
காலத்திற்கேற்ற கதை குழந்தைகளுக்கு..அருமை அம்மா //
வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி கலியபெருமாள்.
// வெங்கட் நாகராஜ் said...
பேராசை பெருநட்டம்.
நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.//
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருவதற்கு நன்றி வெங்கட் நாகராஜ்
Post a Comment