காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.
அங்கு சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் வந்தன.இரண்டுமே மானைத் தின்ன ஆசைப்பட்டன.
சிங்கம் கரடியைப் பார்த்து,"கரடியே! நான் தான் இந்த மானை முதலில் பார்த்தேன்.ஆகவே நான் தான் அதைத் தின்பேன்.நீ போய்விடு என்றது.
ஆனால், கரடியோ சிங்கத்திடம், "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே மான் எனக்கெ உணவு.நீ போய்விடு" என்றது.
இரண்டிற்கும் வாக்குவாதம் முற்றி, ஒன்றுக் கொன்று சண்டையிடத் தொடங்கின.நீண்ட நேரம்
சண்டையிட்டதால், இரண்டும் காயமடைந்து, சோர்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தன.
அவ்வேளையில் நரி ஒன்று அங்கு வந்தது.இறந்து கிடந்த மானையும், வீழ்ந்து கிடந்த கரடியையும், சிங்கத்தையும் பார்த்ததுசூழ்நிலையைப் பயன்படுத்தி , இறந்து கிடந்த மானைத் தின்று சென்றது.
சோர்வு நீங்கி, சிங்கமும், கரடியும் எழுந்து பார்த்த போது நரி மானைத் தின்றுவிட்டு சென்றதைப் பார்த்தன.
"நாம் இப்படி வீணாக சண்டையிட்டதால் ஏமாந்துவிட்டோமே!" என சொல்லி வருந்தின.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கிடைப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும் என உணர்ந்தன.
நாமும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும்
2 comments:
விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம்..
நல்ல பகிர்வு.
நன்றி சார்
Post a Comment