கடவுளின் மீது பக்தி கொண்ட கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.
அது வானில் பறந்தபடியே கீழே மேய்ந்துகொண்டிருக்கும் கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.
கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.
ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால் இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.
காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.
இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.
கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.
நமக்கு எல்லாமே இறைவன் என்றாலும்...நமக்கு வேண்டியதை அவர் அளித்தாலும் அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும் என்பதே இக்கதையின் நீதி.

6 comments:
அருமை
அருமையான நீதி... தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.
//Nagendra Bharathi said...
அருமை//
வருகைக்கு நன்றி Nagendra Bharathi ,
//Blogger ராஜி said...
அருமையான நீதி... தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராஜி.
சிறு கதை வழியாக முயற்சியின் அவசியம் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Pandian Subramaniam
Post a Comment