சண்முகத்தின் அப்பா தினமும் அவன் இரவு தூங்கப் போகும்போது நீதிக்கதைகளை அவனுக்கு சொல்வது வழக்கம்.
ஒரு நாள் அவர் அவனிடம் ' அறிவுக்கூர்மையிருந்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்' என்றார்..
அது எப்படி என்றான் சண்முகம்...
அப்பா அதற்கு அவனுக்கு ஒரு கதையைக் கூறினார்.
ஒரு காட்டில் இரு பூனைகள் இருந்தன.அதில் ஒரு பூனை எலிகளை மட்டுமே பிடித்து உண்ணும்.மற்றதோ பறவைகளை பிடித்து உண்ணும்.
ஒரு நாள் எலிகளைப் பிடிக்கும் பூனையிடம் வெளவால் ஒன்று மாட்டிக்கொண்டது.அது எலிகளை மட்டுமே உண்ணும் பூனை என்று வெளவாலுக்குத் தெரிந்தது..'உடனே அது....எலிகளை மட்டுமே உண்ணும் நீ...பறவையான என்னை உண்ணலாமா?' என்றது.
உடனே பூனை...' நீ பறவையா' என்று கேட்டது.' ஆம்...எனக்கு இறக்கைகள் இருக்கிறதே...நீ பார்க்கவில்லையா. நான் பறக்கும் பறவை தான்' என்றது.
பூனையும் வெளவாலை பறவை என நினைத்து விட்டுவிட்டது.
வேறொரு நாள்...அந்த வெளவால் பறந்து செல்லும்போது ..அதை பறவைகளை மட்டுமே உண்ணும் பூனை தாவிப்பிடித்தது.
உடனே வெளவால் அதனிடம் 'பூனையே....பறவைகளை மட்டும் உண்பவர் நீ...ஆனால் நான் பறவை இல்லையே," என்றது.
அதற்கு பூனை உனக்கு இறக்கைகள் உள்ளதே என்றது.
' அது இறக்கைகள் அல்ல...என்னுடைய மேல் தோல்...என் மீசையைப்பார்...நான் எலி தான் என்றது.
அதை எலி என நினைத்து அப்பூனை விட்டுவிட்டது
வௌவால் அறிவுக்கூர்மையாய் இருந்ததால் தான்..இரு பூனைகளிடமும் அவைகளுக்குத் தகுந்தார் போல பேசி..தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
6 comments:
அதுவும் இந்தக்காலத்திற்கு, சமயோசித புத்தி கொஞ்சம் அதிகமாகவே வேண்டும்...
சரியாகச் சொன்னீர்கள்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
நல்ல கதை.
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.
மிகவும் அருமையான கதை அம்மா.. என் மகளுக்கு இன்று இந்த கதை தான் தூங்குவதற்கு முன்னால் சொல்லப் போகிறேன்.. நன்றி
ஹி...ஹி எனக்கும் அறிவுக்கூர்மை தான் :-))
Post a Comment