Monday, May 15, 2017

இயேசு கூறிய உவமானக் கதைகள் 4- இரவில் வந்த நண்பன்

(இயேசுவின் காலத்தில் யூதாவில் காணப்பட்ட வீடுகளில் இரவில் உறங்குகையில் முன் கதவை மூடி அதன் பின்னால் உறங்குவது வழக்கம்.ஆகவே இரவில் யாரும் கதவைத் திறக்க வேண்டுமாயின் எல்லோரும் தூக்கத்திலிருந்து எழ வேண்டும்)

ஒருவர் தன் நண்பரிடம் நள்ளிரவில் சென்று "நண்பா..மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, எனது நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னைப் பார்க்க வந்துள்ளார்.அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்றான்

அதற்கு உள்ளே இருப்போர், "எனக்குத் தொல்லைக் கொடுக்காதே.ஏற்கனவே கதவைப் பூட்டியாயிற்று.என் பிள்ளைகளும் என்னுடன் படுத்துள்ளனர்.நான் எழுந்து உனக்கு ஏதும் தரமுடியாது" என்றார்

ஆயினும், அவர் விடாது கதவைத் தட்டிக் கொண்டிருந்த படியால், அவர் தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுத்தார்

பின்னர், இயேசு இன்னுமொரு உவமையைக் கூறி, மேலே சொன்னதைத் தெளிவாக்கினார்

மக்களை நோக்கி , "பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தை யாவது மீனுக்குப் பதிலாக பாம்பைக் கொடுப்பாரோ! முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?  நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்துள்ளீர்கள்.அப்படியாயின் விண்ணுலகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்தனை உறுதி என்றார்

முதலில் சொன்ன அப்ப உவமை இடைவிடாத ஜெபத்தைக் குறிக்கிறது.பின்னுரை உவமையின் பொருளை விளக்குகிறது

(கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்.தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப் படும்.ஏனெனில், கேட்போர் எல்லோரும் பெறுகின்றனர்.தேடுவோர் கண்டடைகின்றனர்.தட்டுவோருக்குத் திறக்கப்படும்)

6 comments:

Yaathoramani.blogspot.com said...

நல்ல உவமைக் கதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.

பகிர்ந்து கொண்டதறகு நன்றி.

Pandian Subramaniam said...

கடவுளிடம் வேண்டுவது எப்படி என்பது குறித்த நல்ல உவமானம்.

இடைவிடாமல் சோர்ந்து போகாமல் கடவுளிடம் விண்ணப்பம் செய்யும் போது, அவர் நிச்சயம் நமது வேண்டுதல்களுக்கு பதிலை அளிப்பார்.

நன்மை, தீமை பற்றிய அறிவு, உணர்வு நமக்கு இருந்தாலும் அதை வாழ்வில் தொடர்ந்து பின்பற்றுவது இயலாததாக உள்ளது. கடவுளைத் தொடர்ந்து விடாப்பிடியாக நாம் வேண்டிக் கொள்ளும் போது, தூய வாழ்வு வாழ தேவையான சக்தியை அவர் நிச்சயம் அருளுவார்.

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

Ramani S said...
நல்ல உவமைக் கதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

வருகைக்கும் பாராடுக்கும் நன்றி.

Kanchana Radhakrishnan said...

//வெங்கட் நாகராஜ் said...
நல்ல கதை.

பகிர்ந்து கொண்டதறகு நன்றி.//

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

Kanchana Radhakrishnan said...

//Pandian Subramaniam said...

கடவுளிடம் வேண்டுவது எப்படி என்பது குறித்த நல்ல உவமானம்.......//

வருகைக்கு நன்றி Pandian Subramaniam.