6 மனதை ஒருமுகப்படுத்து.
பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்கத்தொடங்கினர்.
ஒரு நாள்....
அர்ச்சுனன் கையில் வில்லைக்கொடுத்து சற்றுத்தொலைவில் இருந்த பறவையை நோக்கி அம்பு எய்தச்சொன்னார் துரோணர்.
' அர்ஜுனா...உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது பக்கத்திலுள்ள சகோதரர்கள் தெரிகிறார்களா?' என்றார்.
'இல்லை' என்றார் அர்ஜுனன்.
'நான் தெரிகிறேனா'
'இல்லை'
'மரத்தை பார்க்கிறாயா'
'இல்லை'
'மரத்தின் மீதுள்ள பறவையை பார்க்கிறாயா'
'இல்லை'
'வேறு என்ன பார்க்கிறாய்'
'பறவையின் கண்ணை மட்டும் பார்க்கிறேன்'
இப்படி செய்ததால் தான் பறவையின் மீது சரியாக அம்பெய்த முடிந்தது அர்ச்சுனனால்.
நாமும் நாம் அடைய எண்ணும் இலக்கை மட்டுமே பார்க்கவேண்டும்.மற்றவற்றை தவிர்த்திடவேண்டும். யார் தன் கண்ணையும் கருத்தையும் இலக்கில் வைக்கிறானோ அவனே வெற்றியடைவான்.
'