வியாபாரி ஒருவன், பொருட்கள் வாங்க மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.அந்தப் பாதையின் நடுவில் ஒரு பெரிய பாறை ஒன்று வழியை அடைத்துக் கொண்டிருந்தது.மேலே நடக்கவும் வழி இல்லை.
அந்தப் பாறையை நகர்த்தி வழி உண்டாக்க முயன்றான்.ஆனால், அந்தப் பாறை சிறிதளவு கூட நகரவில்லை.
"அடடா! இரவு வந்து விட்டால்...கொடிய விலங்குகள் இங்கு வரலாமே! என்ன செய்வது?" என தனது விதியை நொந்தபடியே, சுற்றி நோட்டம் இட்டான்.
அப்போதுதான்...அவனைப்போல பலர் அந்தப் பாறையை அசைக்க முடியாமல் அங்கு அமர்ந்துள்ளதைக் கண்டான்.அனைவரின் முகத்திலும் சோகம்.
அப்போது அறிவாளி ஒருவன் அவ்விடம் வந்தான்.அவனாலும், பாறையை அகற்றி வழி உண்டாக்க இயலவில்லை.உடனே அவனுக்கு " தனிப்பட்ட ஒருவனால் பாறையை நகர்த்த முடியவில்லை.அதுவே, அனைவரும் ஒன்று கூடி முயன்றால் பாறையை அகற்றலாம்" என்று யோசனை வந்தது.
அவன் அதை அனைவரிடமும் சொல்ல, அனைவரும் முயன்றனர்.இப்போது பாறை அசைந்து கொடுத்ததுடன், நகர்ந்து மலைச் சரிவில் உருண்டது.
பாதை தெரிந்தது.
அனைவரும் ஒன்றுபட்டு முயன்றதால்....வழி கிடைத்த மகிழ்ச்சியில், அவரவர் பயணத்தைத் தொடர்ந்தனர்.
2 comments:
அருமை...
ஒற்றுமை என்றும் சிறப்பு...
நன்றி
திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment