ஒரு நாள் நல்ல வெயில்...
சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான்.
வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான்.
அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.' நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்' என்றது.
செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.
அடுத்த நாள் நல்ல மழை....வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட...குடை செருப்பைப் பார்த்து சிரித்தது..
உடன் செருப்பு சரவணனைப் பார்த்து,' சரவணா...உன் பாதங்களை வெயிலிருந்தும்....குப்பை...மணல்..கல் ஆகியவற்றிலிருந்தும் நான் காக்கிறேன் .. ஆனால் என்னை வீட்டிற்கு வெளியே விட்டு விடுகிறாய்.. தலையை மட்டும் காக்கும் குடையை உள்ளே எடுத்து செல்கிறாயே? என வருந்தியது.
உடனே சரவணன்,' செருப்பே..இதோ பார்...மழையில் குடை நனைந்ததால் அதையும் இன்று வெளியில் வைத்துள்ளேன்.ஆண்டவன் படைப்பில் எந்தப்பொருளும் சரி...எந்த உயிரினங்களும் சரி...அவற்றில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை.ஒவ்வொன்றும் அதற்கான கடமையைச் செய்கிறது.இதை உணராது ..நீங்களும் சரி..மக்களும் சரி ஒருவருக்கொருவர்..இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசுகிறீர்கள்.உன் கடமையை ஒழுங்காக செய்வதை நினைத்து பார்.உனக்கு திருப்தி ஏற்படும். தவிர்த்து, குடை மனிதனுக்கு சில தினங்களுக்கு மட்டுமே பயன் படும்.ஆனால்,நீயோ மனிதர்கள் வெளியே கிளம்பும் போதெல்லாம் உன்னை வருத்திக் கொண்டு, அவர்களுக்காக உழைத்துத் தேய்கிறாய்.பிறருக்கு உதவுவதே நோக்கமாகக் கொண்ட நீ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.' என்றான்.
நாமும், பிறருக்கு பிரதிபலனை எதிர்பாராது உதவி செய்து, நம் கடமையை ஆற்ற வேண்டும்.தவிர்த்து..நமக்குள் நீ உயர்ந்தவன்..நான் உயர்ந்தவன் என்ற சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது.
ஒவ்வொருவரும்...ஒவ்வொரு விதத்தில் உயர்ந்தவர்களே!
14 comments:
எளிமையாக ஆயினும் அருமையான நீதிக் கதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani Sir.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani Sir.
நல்லதொரு நீதிக்கதை... வாழ்த்துக்கள்...
நன்றி
திண்டுக்கல் தனபாலன்
உங்கள் தளத்தில் இணைந்துவிட்டேன்.என்னைப்போன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ள வலைத்தளம். உங்கள் வலைத்தளத்தைப்பற்றி என் வலைப்பதிவில் பகிர விரும்புகிறேன்.பகிரலாமா.
அருமையான நீதிக்கதை...
வருகைக்கு நன்றி kaliaperumal Kali
என் குறிக்கோளே இந்தக் கதைகள் குழந்தைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே,ஆகவே நீங்கள் தாராளமாக உங்கள் வலைப்பதிவில் பகிரலாம்.
வருகைக்கு நன்றி தியானா
கருத்துள்ள கதை
நல்ல கதை..நன்றி!
வருகைக்கு நன்றி T.N.MURALIDHARAN .
வருகைக்கு நன்றி கிரேஸ்.
உங்கள் தள அறிமுகம்... வாழ்த்துக்கள்...
Visit : http://kaliaperumalpuducherry.blogspot.in/2013/04/blog-post_11.html
Post a Comment