அது ஒரு அழகிய கிராமம்.கிராமத்தின் வெளியே ஒரு ஆலமரம் இருந்தது.அதன் அடியில் ஒரு பாம்பு புற்றில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது.
அந்த பாம்பு..தன்னை அடிக்க வருபவர்களை தற்காப்புக்காக கடிக்கும்.ஆகவே மக்கள் யாரும் அந்த புற்றிடம் செல்லமாட்டர்கள்.
ஒரு நாள் ஒரு ஞானி வந்து மரத்திடம் அமர்ந்தார்.அவர் தன்னை துன்புறுத்த வந்ததாக எண்ணிய பாம்பு...அவரை கடிக்க வந்தது...ஆனால் அந்த ஞானியைப் பார்த்ததும்
அவர் காலடியில் விழுந்து எழுந்தது.
மகான் பாம்பிடம்," நீ நிறைய பேரைக் கடித்து நிறைய பாவங்களைத் தேடிக்கொண்டாய்..இனி யாரையும் கடிக்காதே..' என்றார்.
அந்த மகான் சென்றதும்...அன்று முதல் பாம்பு யாரையும் கடிப்பதில்லை.
அது சாதுவாகி விட்டதால்..அதைக் கண்டதும் கிராம மக்கள் அதன் மீது கற்களை வீசி காயப்படுத்தினர்.உடலெங்கும் காயத்துடன் தன் பொந்தினுள் சென்று மறைந்தது பாம்பு.
சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த ஞானி வந்தார்.அவர் வந்தது தெரிந்த பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து அவரை வணங்கியது.
பின் " ஐயா...நீங்கள் சொன்ன அறிவுரையைக் கேட்டு..நான் யாரையும் கடிக்காமல் சாதுவாய் இருந்ததால் ..மக்களால் கொடுக்கப்பட்ட காயங்களைப் பாருங்கள்" என்றது.
அதற்கு அந்த ஞானி ' முட்டாள் பாம்பே நான் கடிக்காதே என்று தான் சொன்னேன்....சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே.நீ சீறியிருந்தால் அவர்கள் பயந்து உன்னை நெருங்கி இருக்க மாட்டார்கள்' என்றார்.
நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளவேண்டும்.இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்.
7 comments:
நல்லதொரு நீதியை சொல்லியுள்ளது இக்கதை.
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய
அருமையான நீதிக் கதை
பகிர்வுக்கு நன்றி
தொட்ர வாழ்த்துக்கள்
//
கோவை2தில்லி said...
நல்லதொரு நீதியை சொல்லியுள்ளது இக்கதை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Ramani.
சின்னப்பிள்ளைகளுக்கென்றில்லை.
பெரியவர்கள் எங்களுக்கும் இப்படியான கதை தேவையாயிருக்கிறது !
//ஹேமா said...
சின்னப்பிள்ளைகளுக்கென்றில்லை.
பெரியவர்கள் எங்களுக்கும் இப்படியான கதை தேவையாயிருக்கிறது !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Hema.
thanks....
இந்த தளமும் சிறுவர்களுக்கு உதவும்..
rajinthan.blogspt.com
Post a Comment