ஒரு மரத்தினடியில் ஒருவன் பச்சோந்தி ஒன்றைப் பார்த்தான்.அது பழுப்பு நிறமாய் இருந்தது.
அவன் தன் நண்பனிடம் ' நான் பச்சோந்தியைப் பார்த்தேன்.அது பழுப்பு நிறம் ' என்றான்.
அந்த நண்பனோ..'இல்லை...இல்லை..அது பச்சை நிறம் நான் பார்த்திருக்கிறேன்' என்றான்.
இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவன் ' இல்லை அது நீல நிறம்' என்றான்.
வேறொருவன் ' அது சிவப்பு நிறம் ' என்றான்.
அனைவரும் ஒருவருக்கொருவர் இது சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் இவர்களின் சண்டைக்கான காரணம் கேட்க ...ஒவ்வொருவரும் தான் பார்த்த பச்சோந்தியின் நிறம் பற்றிக் கூறினர்.
உடனே அவர்..'நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையே..பச்சோந்தி ...அவ்வப்போது அது இருக்குமிடத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்' என்றார்.
இது கேட்டு நண்பர்கள் ஆச்சிரியமடைந்தனர்.
அவர் மேலும் கூறினார்.' சமயத்திற்கு ஏற்றாற் போல நிறம் மாறும் பச்சோந்தி மாதிரி நாம் இருக்கக் கூடாது.எப்போதும்..எந்த இடத்திலும் நல்ல குணத்தோடு பிறர் மீது
குறை கூறாது..அடக்கத்துடன் ..மற்றவர் மீது அன்புடன் நாம் இருந்து கொள்ளவேண்டும்.
"பச்சோந்தி போன்று நேரத்துக்கு தக்கபடி மாறக்கூடாது" என அறிவுரை கூறினார்.
13 comments:
ஆடைகளில் நிறம் மாறலாம்..
குணத்தில் நிறம் மாறக் கூடாது
என அறிவுறுத்தும் நல்ல நீதிக்கதை
சகோதரி.
வருகைக்கு நன்றி மகேந்திரன்.
//எப்போதும்..எந்த இடத்திலும் நல்ல குணத்தோடு பிறர் மீது
குறை கூறாது..அடக்கத்துடன் ..மற்றவர் மீது அன்புடன் நாம் இருந்து கொள்ளவேண்டும்.//
உண்மையான வார்த்தைகள்.
நன்றி
கோவை2தில்லி.
நல்ல கதை.... மக்களில் இப்போது இந்தப் பச்சோந்தி குணம் தான் அதிகரித்துவிட்டதோ என்று எனக்கு எப்போதும் தோன்றும்....
நல்ல நீதி.
பச்சோந்திக்கு நிறமே கிடையாதாம்...
அதன் கண்ணாடிபோன்ற செல்கள் தன்னைச் சுற்றியுள்ள நிறங்களையே அப்படிப் பிரதிபலிக்கின்றனவாம்..
//வெங்கட் நாகராஜ் said...
நல்ல கதை.... மக்களில் இப்போது இந்தப் பச்சோந்தி குணம் தான் அதிகரித்துவிட்டதோ என்று எனக்கு எப்போதும் தோன்றும்....//
வருகைக்கு நன்றி
வெங்கட் நாகராஜ்.
//guna thamizh said...
பச்சோந்திக்கு நிறமே கிடையாதாம்...
அதன் கண்ணாடிபோன்ற செல்கள் தன்னைச் சுற்றியுள்ள நிறங்களையே அப்படிப் பிரதிபலிக்கின்றனவாம்..//
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி
guna thamizh .
அருமை கதை வாழ்த்துகள்
Good story.
ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். http://mahizhampoosaram.blogspot.in/2012/02/blog-post.html
// dhanasekaran .S said...
அருமை கதை வாழ்த்துகள்//
வருகைக்கு நன்றி dhanasekaran .S.
//சாகம்பரி said...
Good story.
ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள். //
விருதுக்கு நன்றி சாகம்பரி.
Post a Comment