முருகன் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.
அவனது தாய் தந்தை இருவரும் சிறிய அளவில் பாத்திரகடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்துவந்தனர்.
முருகனுக்கு படிப்பை விட வியாபாரத்தில் நாட்டம் அதிகம்.தினமும் சாயங்காலம் பள்ளி விட்டவுடன் கடைக்கு வந்து அவனது பெற்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்வான்,
அவனுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் உண்டு, அதில் வரும் பெரிய பெரிய super market,departmental store இவற்றை பார்த்துவிட்டு தன் கடையையும் இந்த மாதிரி கொண்டு வரவேண்டுமென்று நினைப்பான்.
அடுத்த நாள் பள்ளியில் டீச்சர் ஒவ்வொருவரிடமும் உங்கள் எதிர்கால ஆசை என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தார்.முருகன் முறை வந்ததும் அவன் சொன்னான் ' எனக்கு படிப்பை விட வியாபாரம்' செய்ய ஆசை. என. பெற்றோரின் தொழிலை பெரிசு படுத்தவேண்டும் என்றான்.
டீச்சர் உடனே முருகா நீ இப்பொழுதுபத்தாம் வகுப்பு படிக்கிறாய் .படிப்பிலும் ஓரளவுக்கு நீ நன்றாக படிக்கிறாய்,அதனால் இன்னும் இரண்டு வருடம் படித்தால் பன்னிரண்டாவது முடித்துவிடுவாய்.அதற்கு பின் நீ உன் தொழிலை தொடரலாம்.
ஒவ்வொரு மாணவனும் அடிப்படை கல்வியான பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கவேண்டும்.மேலும் நீ விருப்பபட்டால் அதற்கு பிறகு தொலைதூரகல்வி மூலம் நீ ஒரு டிகிரி வாங்கிவிடலாம்,அது உன் தொழிலை எவ்வாறு முன்னுக்கு கொண்டுவருவது பற்றி அறிய உதவும்.
விரும்பி செய்யும் எந்த தொழிலும் கடினமானதில்லை என்றார்.