விவசாயி ஒருவர் ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க கொழுக்கொம்பாக ஒரு குச்சியைநட்டு வைத்து அதில் செடியை கட்டிவைத்தார்.ஆடு மாடு அதை திங்காமல் இருக்க அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார்.அதற்கு அவ்வப்போது தண்ணீர் ஊற்றினார்.தேவையான உரமும் போடப்பட்டது.
ஆலமரக்கன்று பாதுகாப்போடு பேணப்படுவதை கண்டு எதிரேயுள்ள காட்டுச்செடி பொறாமையுடன் ன இந்த மாதிரி ஒரு "சிறை வாழ்க்கை" உனக்கு தேவையா என்று கேலிசெய்தது.மேலும் எங்களைப் பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்றது.
ஆலமரச்செடி வெகுநேரம் யோசித்தது.இனிமேல் நமக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம், இதிலிருந்து நாம் எப்படியாவது தப்பிக்கவேண்டுமென்று எண்ணியது.
அடுத்தநாள் காட்டுச்செடி இருந்த இடமெல்லாம் வெட்டி எறியப்பட்டது.அந்த வழியாக வந்த விவசாயின் மகன் அவரிடம் அப்பா ஏன் சில செடிகள் எல்லாம் வெட்டப்பட்டும் இந்த செடி மட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கிறது என்று கேட்டான்.
விவசாய தன் மகனிடம் அழிக்கப்பட்ட செடிகள் எல்லாம் காட்டுசெடிகள்.அவைகள் சீக்கிரமாக வளர்ந்து சீக்கிரமாக அழியக்கூடியது பாதுகாக்கபட்ட செடிதான் "ஆலமரக்கன்று".இது பல நூறு ஆண்டுகள் வளர்ந்து பயன்படக்கூடியது.இது பெரிய மரமாக வளர்ந்து விழுதுகளுடன் மக்களுக்கு பயனுள்ள மரமாக இருக்கும்.அதனால் தான் இதற்கு இத்தனை பதுகாப்பு, என்றார்.
ஆலமர்க்கன்றும் தன்னை கட்டிவைத்திருக்கும் குச்சியும்,சுற்றியிருக்கும் வேலியும் தான் தன்னை நலமாக வாழ்வதற்குதானே தவிர தமது சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்று புரிந்துகொண்டது
நீங்களும் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகளுக்கு பணியத்தான் வேண்டும்.
No comments:
Post a Comment