ரமேஷின் தாத்தா அடிக்கடி நிலைக்கண்ணாடியை பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்.
ரமேஷுக்கு ஆச்சரியம்.தாத்தா ஏன் அடிக்கடி கண்ணாடியை உற்று உற்று பார்க்கிறார் என்று.அந்த கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..ஒரு வேளை மாயா ஜாலக் கண்ணாடியோ? அவனால் ஆவலை அடக்கமுடியவில்லை.
தாத்தாவை கேட்டான்
தாத்தா நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கண்ணாடி சாதாரணக்கண்ணாடி தானே என்று கேட்டான்.ஆமாம் என்றார் தத்தா.
அதில் அப்படி என்ன தெரிகிறது என்றான்?
தாத்தா கூறினார், நான் பார்த்தால் என் முகம் தெரியும்,நீ பார்த்தால் உன் முகம் தெரியும்.
பின்னர் ஏன் நீங்கள் அடிக்கடி அதையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினான்.
தாத்தா சிரித்தார்.மேலும் தாத்தா கூறினார் இது சாதாரணகண்ணாடி தான்.ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய என்றார்,
ரமெஷுக்கு ஒன்றும் புரியவில்லை..பாடமா..?கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும் என்று கேட்க
தாத்தா கூறலானார்.:கண்ணாடி சொல்லும்முதல் பாடம்:
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டடுவிட்டால் கண்ணடியில் அது தெரிகிறது.அந்தக் கறையை கண்ணாடி கூட்டுவதுமில்லை,குறைப்பதுமில்லை.உள்ளதை உள்ளபடி காட்டுகிறது.அதுபோல உன் சகோதரனிடமும் நணபனிடமும் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் சுட்டிக்காட்டவேண்டும்,எதையும் மிகையாகவோ ஜோடித்தோ சொல்லக்கூடாது.
கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்:
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக்காட்டுகிறது,நீ அகன்றுவிட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்,அதுபோல மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்டவேண்டும்.அவர் இல்லாதபோது முதுகுக்கு பின்னால்பேசக்கூடாது,
மூன்றாவது பாடம்
ஒருவருடைய முகக்கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அதன் மீது கோபப்படுவ்தில்லை.அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர்மீது கோபமோ எரிச்சலோ படாமல் அந்த குறைகளை திருத்திக்கொள்ளவேண்டும்.
ரமேஷ் தாத்தாவை ஆரத்தழுவிக்கொண்டு கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துக்களா என்று ஆச்சிரியப்பட்டு நன்றி கூறினான்.
No comments:
Post a Comment