Sunday, May 7, 2017

இயேசு கூறிய கதைகள் 1- இரக்கமற்ற பணியாளன்



(இயேசுபிரான் தன் போதனைகளின் போது கூறிய உவமானக்கதை இது.
இயேசுவின் சீடரான பேதுரு,' தன் சகோதரர், சகோதரிகளில் ஒருவர் தனக்கு எதிராக பாவம் செய்தால்,எத்தனை முறை அவரை மன்னிக்கலாம்' என்று கேட்டபோது சொன்னது இது.பாவமன்னிப்பை  பற்றியது.)


அரசர் ஒருவர் தன் பணியாளர்களிடம்  கணக்குக் கேட்க விரும்பினார்

அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய போது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன் பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்

அவன், பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தான்.

ஆனால், அரசரோ, அவனையும், அவன் மனைவி மக்களோடு உடமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்

உடன், அப்பணியாள், அவர் காலடிகளில் பணிந்து , "என்னைப் பொருத்தருள வேண்டும்.விரைவில் கடனைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்றான்

அவன் மீது பரிதாபம் கொண்டு மன்னன், அவனை விடுவித்ததுடன், அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்

அப்பணியாள் வெளியே சென்றதும், அவனிடம் நூறு தெனரியம் கடன் பட்டிருந்த உடன் பணி புரியும் பணியாளரைக் கண்டான்,"என் கடனைத் திருப்பித் தா" என அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்

அந்த பணியாளனும், இவன் கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்கும் படியும், விரைவில் அவன் கடனை அடைத்து விடுவதாகவும் கூறினான்.

ஆனால் அவன் அதற்கு  இசையாமல் அவனை சிறையெடுத்தான்

இதைப் பார்த்த மற்ற பணியாளர்கள் அர்சனிடம் சென்று முறையிட்டனர்

அரசன், அவனை வரவழைத்தான். "பொல்லாதவனே! நீ என்னை வேண்டிக் கொண்டதால் உன் கடன் முழுவதையும் நான் தள்ளுபடி செய்தேன்.ஆனால், நீயோ..உன் பணியாளரிடம் சற்றும் இரக்கம் காட்டவில்லை.ஆகவே, உன் கடன் அனைத்தையும் அடைக்கும் வரை தண்டனையை அனுபவித்தேத் தீர வேண்டும் என அவனை தண்டித்தான்

(பிறர் நம்மிடம் இரக்கமும், அன்பும் காட்ட  வேண்டும் என நினைக்கும் நாமும், பிறரிடம் அன்பாயும், இரக்கத்துடனும் இருக்க வேண்டும்)

(தாலந்து,தெனரியம் என்பதெல்லாம் கிரேக்கச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும், இவை, கிரேக்கம், ரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன் படுத்தப்பட்ட நாணய அலகாகும்) 

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சென்னை பித்தன் said...

இது போன்ற கதைகள் அவசியம் சொல்லப்பட வேண்டும்

Kanchana Radhakrishnan said...

Blogger வெங்கட் நாகராஜ் said...
நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.///

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

Kanchana Radhakrishnan said...

Blogger சென்னை பித்தன் said...
இது போன்ற கதைகள் அவசியம் சொல்லப்பட வேண்டும் ////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்னை பித்தன்.