குமரனும்,சரவணனும் நண்பர்கள்...குமரன் வகுப்பில் படு சுட்டி....எதிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்ததுடன் ...அனைவரிடமும் நல்ல பெயரையும் எடுத்தவன்.
சரவணனோ..நேர் எதிர்.படிப்பிலும் சுமார்...அவ்வப்போது...சிறு சிறு திருடுகளிலும் ஈடுபட்டு வந்தான்.
ஒரு நாள் சரவணனின் தந்தை குமரனிடம்..' உன் நண்பன் சரவணனை திருத்த வேண்டியது உன் கடமை அல்லவா.....' என்றார்.
அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் குமரன்.
ஒரு நாள் வகுப்பில்...பக்கத்து நண்பன் ஒருவன் பையிலிருந்து ...பணத்தை சரவணன் திருடுவதை...குமரன் பார்த்துவிட்டான்.
சரவணன் உடன் குமரனிடம் ' குமரா...இதை நீ ஒருவன் பார்த்துவிட்டாய்...இதை யாரிடமும் சொல்லிவிடாதே...இதுவரை நான் திருடுவதை யாரும் பார்த்ததில்லை...
இன்று இத்திருட்டு நம் இருவருக்கு மட்டுமே தெரியும்' என்றான்.
உடன் குமரன்..'சரவணா..நீ அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்.இதுவரை நீ செய்த திருட்டுகள் உனக்கு மட்டுமே தெரியும் என்று.
நீ செய்வதை,சொல்வதை ..இன்னொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதை மறந்துவிடாதே...இன்று..இத்திருட்டு ..என்னையும் சேர்த்து மூவருக்குத் தெரியும்" என்றார்.
' யார்....யார்...; என பயத்துடன் கேட்டான் சரவணன்.'
"நாம் செய்யும் நல்லது..கெட்டது எல்லாவற்றையும் அவன் நம்முடன் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்....
அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான். அவன் தான் இறைவன் "' என்றான். குமரன்.
குமரன் சொல்வதுபோல ....நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்கான பயனை நமக்கு பரிசாக அளிக்கிறான்.
11 comments:
குமரன் சொல்வதுபோல ....நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்கான பயனை நமக்கு பரிசாக அளிக்கிறான்//
அருமையான நீதிக்கதை.
எல்லாவற்றையும் இன்னொருவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் - ஆமாம்....
நல்ல நீதிக்கதை .... பகிர்வுக்கு நன்றி.
கோமதி அரசு said...
குமரன் சொல்வதுபோல ....நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்கான பயனை நமக்கு பரிசாக அளிக்கிறான்//
அருமையான நீதிக்கதை.//
நன்றி கோமதி அரசு.
வெங்கட் நாகராஜ் said....
நல்ல நீதிக்கதை .... பகிர்வுக்கு நன்றி//.
அருமையான நீதிக்கதை.//
நன்றி வெங்கட் நாகராஜ்.
ஆம். நிச்சயம் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்.
நல்லதொரு நீதிக்கதை.
தண்ணீர் பந்தல் வே.சுப்பிரமணியம் எனக்கு வழங்கிய Liebster Blog விருதை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து விருதை ஏற்றுக்கொளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://tnmurali.blogspot.com
வருகைக்கு நன்றி கோவை2தில்லி .
விருதுக்கு நன்றி T.N.MURALIDHARAN
குழந்தைகளுக்குக் கட்டாயம் கடவுள் நம்பிக்கை கொடுக்கவேணடும்.பிறகு வளர அவர்கள் தீர்மானிக்கட்டும் !
//
ஹேமா said...
குழந்தைகளுக்குக் கட்டாயம் கடவுள் நம்பிக்கை கொடுக்கவேணடும்.பிறகு வளர அவர்கள் தீர்மானிக்கட்டும் !//
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்.
நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.. .
அருமையான நீதிக்கதை . .
Post a Comment