Thursday, April 5, 2012

109. உள்ளதும் போய்விடும்...(நீதிக்கதை)




ஒரு கொக்கு ஒன்று நதிக்கரையில் நின்றபடியே...நீரில் மீன் வரும்போது கொத்தித்தின்ன காத்திருந்தது.

பல சிறிய மீன்கள் நதியில் கொக்கின் கண்ணில் பட்டாலும்....அது பேராசையுடன் பெரிய மீன் வருகைக்குக் காத்திருந்தது.

அப்போது பெரிய மீன் ஒன்று ஆற்றில் வர ...அதைக் கொத்தி விழுங்கியது கொக்கு...ஆனால் கொக்கின் தொண்டை சிறியதாய் இருந்ததாலும் ....மீன் பெரியதாய் இருந்ததாலும் மீன் கொக்கின் தொண்டையில் அகப்பட்டுக்கொண்டது.

மீனை துப்பவும் முடியாமல்......விழுங்கவும் முடியாமல் ...மூச்சுத் திணறிக் கொக்கு மயங்கி விழுந்தது,

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கொக்கு ..' என்னைப் போல சின்ன மீன்கள் ஒன்றிரண்டை கொத்தி சாப்பிடாமல் பேராசையுடன் .....பெரிய மீனை விழுங்கின உனக்கு
இந்த தண்டனை தேவை தான்' என்றது.

நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.


9 comments:

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தமிழ்மகன்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு சிந்தனைக்கதை நன்று.

விச்சு said...

அதிக ஆசைப்பட்டால் இப்படித்தான்.

வெங்கட் நாகராஜ் said...

அதிக ஆசை எப்போதும் துன்பத்தையே தரும் என்பதை நல்ல நீதிக்கதை மூலம் சொன்னதற்கு நன்றி.

நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
guna thamizh
விச்சு
வெங்கட் நாகராஜ்

ADHI VENKAT said...

நல்லதொரு நீதியை சொன்ன கதை.

இதை படித்ததும் ”ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு”...என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

ஹேமா said...

ம்...குட்டிக்கதையில் எத்தனை பெரிய தத்துவம்.குழந்தைகளுக்காக இல்லை.எங்களுக்கான கதை இது !

Kanchana Radhakrishnan said...

//கோவை2தில்லி said...
நல்லதொரு நீதியை சொன்ன கதை.

இதை படித்ததும் ”ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு”...என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.//


கொக்கின் குணத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தக் கதை. நன்றி.
கோவை2தில்லி.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
ம்...குட்டிக்கதையில் எத்தனை பெரிய தத்துவம்.குழந்தைகளுக்காக இல்லை.எங்களுக்கான கதை இது //

உண்மை தான் ஹேமா.