பணக்காரன் ஒருவன் வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்தது.அதனால் தன் சொத்துக்களை பாதுகாக்க தன் நண்பன் மாணிக்கம் என்பவனை நம்பி ஒப்படைத்துவிட்டு சென்றான்.
பணக்காரனின் நிலங்களின் நடுவே ஒரு குளம் இருந்தது.அக்குளத்தில் பலவகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் ...மீனுக்கு ஆசைப்பட்ட மாணிக்கம்..வலைவீசி மீன்களைப் பிடித்தான்.அச்சமயம் ஊருக்கு சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்தான்.
தன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டி அமர்த்தப்பட்ட தன் நண்பன் மாணிக்கம் குளத்தில் மீன்களைபிடிப்பதைக்கண்டு " மற்றவர்கள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நீயே தவறு செய்கிறாயே?" என்று கேட்டுவிட்டு அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.
மாணிக்கம் ..தன்னை நம்பிய பணக்காரனுக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணி பின்னர் வெட்கமடைந்தான்.
நாமும்...நம்மை நம்பி பிறர் ஒப்படைக்கும் காரியங்களை நம் காரியங்களைப்போல செய்யவேண்டும்.
நம்மை நம்பியவர்களை ஏமாற்றக்கூடாது.
12 comments:
நம்பிக்கைத் துரோகம் என்பது
கயமத் தனங்களில் உச்சம்...
எதிரியை கூட மன்னித்துவிடலாம்
ஆனால் நம்பிக்கைத் துரோகியை
மன்னிக்கவே கூடாது...
நல்ல நீதிக்கதை சகோதரி...
நம்பியவர்களை ஏமாற்றுவது தவறான செயல். நல்லதொரு நீதி.
// மகேந்திரன் said...
நம்பிக்கைத் துரோகம் என்பது
கயமத் தனங்களில் உச்சம்...
எதிரியை கூட மன்னித்துவிடலாம்
ஆனால் நம்பிக்கைத் துரோகியை
மன்னிக்கவே கூடாது...
நல்ல நீதிக்கதை சகோதரி...//
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மகேந்திரன்
நல்ல கதை.
தேவையான சிந்தனை..
தொடர்ந்து நீதி சொல்லுங்கள்.
வருகைக்கு நன்றி
வெங்கட் நாகராஜ்
guna thamizh.
தவறு என்று தெரிந்தும் இந்தத் தவறை மனிதர்கள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்....இருக்கிறோம் !
ஆம். ”நம்பிக்கை துரோகம் கூடாது”
இதை அனைவரும் உணர வேண்டுமே!
நல்லதொரு நீதிக்கதை.
எந்த தீமை செய்தாலும் நம்பிக்கை துரோகம் மட்டும் செய்யக் கூடாது என்று ந்மபுவள் நான். என் கருத்தை ஒத்திய உங்க பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி
Thanks.....
இந்த தளமும் சிறுவர்களுக்கு உதவும்...
Rajinthan.blogspot.com
நம்பிகை தூரோகம் ஒருவரை செயல் இழக்க செய்கிறாது. மரணத்தை விட மிக கொடியாது
Post a Comment