Friday, February 10, 2012

106. நியாயமான ஆசையே வேண்டும். (நீதிக்கதை)




ஒரு ஊரில் வயதான கணவனும் மனைவியும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் இறைவனிடம் ' கடவுளே..எங்களது முதுமைக் காலத்தில் ஏன் இப்படி வறுமையில் வாட விடுகிறாய் ' என முறையிட்டனர்.

ஒரு நாள் இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஒரு வாத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ' தினமும் இந்த வாத்து ஒரு பொன் முட்டையிடும்...அதை விற்று உங்கள் வறுமையை போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.

அவர்களும் அப்படியே செய்து வர அவர்கள் வறுமை சிறிது சிறிதாக மறைந்தது.

வறுமை மறைந்ததும் ..அது நாள் வரை அவர்களுக்கு இல்லாத பேராசை உண்டானது.

தினமும் ஒரு பொன் முட்டையிடும் இந்த வாத்தை அறுத்தால்..அதனுள் இருக்கும் அனைத்து பொன் முட்டைகளையும் எடுத்துக் கொண்டு ..நாம் பெரும் பணக்காரர்கள் ஆகி விடலாம் ' என்று எண்ணினர்.

அதனால் அந்த வாத்தின் வயிற்றைக் கத்தியால் கிழித்தனர்.

ஆனால் அந்த வாத்தின் வயிற்றில் பொன் முட்டைகள் இல்லாததுடன் எல்லா வாத்துகள் போல எலும்பும் சதையுமே இருந்தன.

பேராசையால் முட்டாள் தம்பதிகள் தினமும் அடையும் லாபத்தை இழந்தனர்.

மீண்டும் வறுமையால் வாட ஆரம்பித்தனர்.

பேராசை பெரு நஷ்டம்.

நாமும் எந்த நிலையிலும் பேராசை படக்கூடாது.

நம் நியாயமான ஆசைகளை  மட்டுமே இறைவன் நிறைவேற்றிவைப்பார்,

8 comments:

ADHI VENKAT said...

நல்லதொரு நீதிக்கதை. பேராசை பெருநஷ்டத்தில் தான் கொண்டு விடும்....

Unknown said...

நல்லதொரு நீதிக்கதை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
கோவை2தில்லி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சிநேகிதி.

Yaathoramani.blogspot.com said...

குழந்தைகளுக்கான மொழியில்
மிக அழகாக்ச் சொல்லப்பட்ட
சொல்லப்படவேண்டிய அருமையான கதை
நமது சிறுவயதில் கேட்ட கதை
இப்போதைய குழந்தைகளுக்கு இந்தக் கதை தெரியுமோ
எனத் தெரியவில்லை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

//Ramani said...
குழந்தைகளுக்கான மொழியில்
மிக அழகாக்ச் சொல்லப்பட்ட
சொல்லப்படவேண்டிய அருமையான கதை
நமது சிறுவயதில் கேட்ட கதை
இப்போதைய குழந்தைகளுக்கு இந்தக் கதை தெரியுமோ
எனத் தெரியவில்லை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//


ஆம் .நமக்கு தெரிந்த கதை .குழந்தைகளுக்கு தெரியவேண்டிய கதை.

ஹேமா said...

பேராசையால்தானே இருக்கிற சந்தோஷமும் ஓடிப்போகுது.சிறுவர்களுக்கு நல்லதொரு நீதிக்கதை !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Hema.