சரவணன்...எப்போதும் காலை எழுந்ததும் தன் பெற்றோர்களுக்குத் தேவையான பணிவிடைகளை செய்த பின்னரே மற்ற வேலைகளைக் கவனிப்பான்.அதே நேரத்தில் அவனுக்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது.
ஒரு நாள் இறைவன் அவனுக்குக் காட்சியளித்தார்......
அப்போது அவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான்.அப்பணியை பாதியில் நிறுத்திவிட்டு இறைவனைக் காண விரும்பவில்லை..
' இறைவா....எனக்காக சற்றுநேரம் பொறுங்கள்..பெற்றோர்களுக்கான என் தினசரி கடமையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.
இறைவனும் வீட்டுத் திண்ணையில் அவனுக்காக அமர்ந்திருந்தார்.
பின்னர் அவன் இறைவனிடம் வந்து ' தங்களை தாமதப்படுத்தியதற்கு மன்னியுங்கள் ; என்றான்....
ஆனால் இறைவன் மன மகிழ்ச்சியோடு...'சரவணா...இறைவனே நேரில் வந்தும் ....பெற்றோர்கள் தான் முதல் கடவுள் என அவர்களுக்குப் பணிவிடை செய்த பின்னரே என்னைக் காணவந்த உன்னை பாராட்டுகிறேன்.அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை உணர்ந்தவன் நீ. வாழ்வில் எல்லா செல்வத்தையும் பெற்று வாழ்வாயாக...'என்று வாழ்த்திச் சென்றார்.
இதையே திருவள்ளுவரும் .....
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்றுள்ளார்.
(எழுத்துக்கள் எல்லாவற்றிலும் முதலாக உள்ள எழுத்து ' அ' அது போல ஒருவனுக்கு உலகில் முதல் முதலான தெய்வங்கள் 'தாய் தந்தையரே' )
10 comments:
நல்லதொரு அறிவுரை கதை...
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் //
சத்தியமான வார்த்தைகள் சகோதரி.
கண்முன்னே உலவும் நமக்கு உயிரும் உடலும் கொடுத்த
தெய்வங்கள் தான் முதலில் முக்கியம்.
அருமையான கதை மூலம் விளக்கியமை நன்று.
Pundaleekan kadhaiyin different version
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.
//மகேந்திரன் said...
சத்தியமான வார்த்தைகள் சகோதரி.
கண்முன்னே உலவும் நமக்கு உயிரும் உடலும் கொடுத்த
தெய்வங்கள் தான் முதலில் முக்கியம்.
அருமையான கதை மூலம் விளக்கியமை நன்று.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மகேந்திரன்.
// Srividhyamohan said...
Pundaleekan kadhaiyin different version//
ஆம். புண்டரிகன் கதை தான்.அவனுக்கு பாண்டுரங்கன் காட்சி அளித்தார் .இது எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு புரிய வைப்பது சற்று கடினம் என்பதால்,சரவணன் என்ற தமிழ் பெயரையும்,ஆண்டவன் என்று கடவுளின் பொதுப் பெயரையும் கதையையும் சற்றே மாற்றி குறிப்புட்டுள்ளேன்.
நீதிக்கதைகள் என்பது எல்லாமே பழைய கதைகளின் தாக்கம் தான்.
வருகைக்கு நன்றி.
என் நண்பியின் குழந்தைகளுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கூட்டி வாசிக்கிறார்கள் !
// ஹேமா said...
என் நண்பியின் குழந்தைகளுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கூட்டி வாசிக்கிறார்கள் //
நன்றி ஹேமா.
Post a Comment