Monday, December 19, 2011

99. தகுதிக்கு மீறிய செயல் (நீதிக்கதை)




ஒரு காட்டில் சிற்றெறும்பு ஒன்று தன் கூட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

அது காட்டில் விலங்குகள் தன்னைவிட வலிமை மிக்க விலங்குகளால் உணவிற்காக கொல்லப்படுவதைப் பார்த்ததும்...

அந்த விலங்குகளைப் போல தங்கள் இனமும் வலிமை அடையவேண்டும் என விரும்பியது.

ஆகவே அது இறைவனை வேண்டி தவம் இருந்தது...

ஒரு நாள் இறைவன் அந்த எறும்பின் முன் தோன்றி "'எறும்பே உனக்கு என்ன வேண்டும் " என்றார்.

இறைவன் தன்முன்னே வந்ததுமே....மிகவும் மகிழ்ந்த எறும்பு... " நாங்கள் கடித்தால் சாக வேண்டும் ".அந்த வரம் வேண்டும்'. என்றது.

எறும்பு கேட்டதைக் கண்டு சிரித்த இறைவன் ' நன்கு யோசித்துத்தான், கேட்கிறாயா? என்றார்.எறும்பும் 'ஆம்.'.யோசித்துத்தான் கேட்கிறேன். என்றது

'அப்படியே ஆகட்டும்' என்று கூறி மறைந்தார் இறைவன்.

தங்கள் இனத்திற்கு வலிமை சேர்த்துவிட்டதால் மகிழ்ந்த சிற்றெறும்பு ....தனக்கு கிடைத்த வரத்தை சோதிக்க எண்ணி...காட்டில் வேட்டையாட வந்த வேடனின் காலைக் கடித்தது.

உடனே வேடன்...காலைக் கடித்த எறும்பை ' பட் ' என அடிக்க...அது இறந்தது.

பாவம் எறும்பு...அது இறைவனிடம் கேட்ட வரம்..' நாங்கள் கடித்தால் சாக வேண்டும்' என்பதே..யார் சாக வேண்டும் என கேட்கவில்லை..

தான் கேட்ட வரமே தங்கள் இனத்துக்கு எமனாக வந்துவிட்டதை அது உணரவில்லை.

எறும்பு தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதே அதன் மரணத்திற்கு காரணமாய் இருந்துவிட்டடது.

13 comments:

Yaathoramani.blogspot.com said...

தன் தகுதியை மீறும் போதே நாம் நிதானம் இழந்துவிடுவதால்
வார்த்தைகளில் கவனம் இழந்துவிடுகிறோம்
எனவே இதுபோல் நேருவதற்கான வாய்ப்பு அதிகம்
எனச் சொல்லிப் போகும் கதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 1

Kanchana Radhakrishnan said...

//Ramani said...
தன் தகுதியை மீறும் போதே நாம் நிதானம் இழந்துவிடுவதால்
வார்த்தைகளில்கவனம் இழந்துவிடுகிறோம்//

உண்மைதான். வருகைக்கு நன்றி.

கோவி said...

அடடா கதை.. அருமை..
நானும் ஒரு கதை எழுதிருக்கேன்.
முரண்சுவை வந்து பாருங்க..

மகேந்திரன் said...

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டுமென சும்மாவா சொன்னாங்க...
நல்ல நீதிக்கதை சகோதரி.

மகேந்திரன் said...

த.ம 4

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோவி.

வெங்கட் நாகராஜ் said...

தகுதிக்கு மீறிய செயல்... - கேட்பதற்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?.... நல்ல விஷயம் சொல்லும் கதை...

ஹேமா said...

அதிக ஆசை அதிக நஸ்டம்தான் !

Rathnavel Natarajan said...

அருமை.

Kanchana Radhakrishnan said...

//வெங்கட் நாகராஜ் said...
தகுதிக்கு மீறிய செயல்... - கேட்பதற்கும் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?.... நல்ல விஷயம் சொல்லும் கதை...//

நன்றி வெங்கட் நாகராஜ்.

Kanchana Radhakrishnan said...

// மகேந்திரன் said...
விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டுமென சும்மாவா சொன்னாங்க...
நல்ல நீதிக்கதை சகோதரி.//

நன்றி மகேந்திரன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Hema.

=

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Rathnavel.