Thursday, December 29, 2011

101. போதுமென்ற மனம்...(.நீதிக்கதை)



மோகன் படிக்கும் பள்ளியில் அவனுடைய நண்பனான கந்தனின் பிறந்த நாளுக்கு கந்தனின் தந்தை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் பழங்களைக் கொண்டு வந்தார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் நின்று கொண்டிருந்த மோகனிடமும் அப்படியே ஒரு பழத்தைக் கொடுத்தார்..

கூடையில் மீதம் இரண்டு பழங்கள் இருப்பதைக் கண்ட மோகன் ..மேலும் கையை நீட்டினான்.

அவரும் இன்னொரு பழத்தை எடுத்து அவனிடம் தந்தார்.இன்னொரு கையில் அதை வாங்கினான் அவன்..அப்போதும் மோகனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

இரண்டு பழங்களையும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு ...அவன் மீண்டும் கையை நீட்டினான்.

அவர் கடைசியாக இருந்த பழத்தையும் அவனிடம் கொடுத்தார்.

அப்போது அவன் அணைத்திருந்த பழம் ஒன்று நழுவி தரையில் விழுந்தது. அதை எடுக்க குனிந்தான்.அப்போது மற்ற இரண்டு பழங்களும் கீழிருந்து உருண்டு ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தன.

மோகன் கிடைத்த ஆப்பிள் பழங்களை நழுவ விட்டோமே என்று வருந்தினான்.

அப்போது கந்தனின் தந்தை ...'தம்பி..நான் ஒரு ஆப்பிள் கொடுத்தேன்.மற்றவர்களைப்போல அதுவே போதும் என நீ நினைக்கவில்லை.ஆனால் மேலும் மேலும் ஆசைப்பட்டாய்...கடைசியில் மற்றவர்களுக்கு கிடைத்த ஒரு ஆப்பிள் கூட உனக்கு கிடைக்கவில்லை...இனிமேலும் ..அதிகம் ஆசைப்படாது கிடைத்தது போதும் என்று நினை...போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் என்றார்.

பின்னர் தனது கைப்பையிலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து மோகனுக்கு கொடுத்தார்.  மோகன் வெட்கி தலை குனிந்தான்.

10 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு.

கோவி said...

//அதிகம் ஆசைப்படாது கிடைத்தது போதும் என்று நினை...//

எத்தனை பேருங்க நெனைக்கிறாங்க..

மகேந்திரன் said...

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
அருமையான நீதிக்கதை சகோதரி.

வெங்கட் நாகராஜ் said...

//பேராசை பெரு நஷடம்...// நல்ல கருத்தினைச் சொல்லும் நீதிக்கதை.. பகிர்ந்தமைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்ல பதிவு.//

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.

Kanchana Radhakrishnan said...

// கோவி said...
//அதிகம் ஆசைப்படாது கிடைத்தது போதும் என்று நினை...//

எத்தனை பேருங்க நெனைக்கிறாங்க.//

:-))

Kanchana Radhakrishnan said...

//மகேந்திரன் said...
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
அருமையான நீதிக்கதை சகோதரி.//

நன்றி மகேந்திரன்.

Kanchana Radhakrishnan said...

நன்றி வெங்கட் நாகராஜ்.

ஹேமா said...

பிறந்திருக்கும் புதுவருஷத்தில் இந்தச் சிந்தனை எல்லோரு மனதிலும் பதியட்டும்.2012ன் அன்பு வாழ்த்துகள் !

Kanchana Radhakrishnan said...

நன்றி ஹேமா புதுவருஷ வாழ்த்துகள்.