Monday, November 28, 2011

96. ' பெருக்கத்து வேண்டும் பணிவு ' (நீதிக்கதை)




மோகன் நன்கு படிக்கும் மாணவன்.

அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் First Rank வாங்கி வந்தான்.அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.

அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து ......மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.

கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை.

தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.

ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக
மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.

சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர் ...'மோகன் நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும் ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.

ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.

நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று கர்வமோ அகம்பாவமோ கொள்ளக்கூடாது.நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும் உண்டு என்று எண்ணவேண்டும்.

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

கர்வமும் அகம்பாவமும் கீழே தான் கொண்டு செல்லும் என விளக்கும் இந்த கதை நன்று.. பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

//
வெங்கட் நாகராஜ் said...
கர்வமும் அகம்பாவமும் கீழே தான் கொண்டு செல்லும் என விளக்கும் இந்த கதை நன்று.. பகிர்வுக்கு நன்றி.//

நன்றி
வெங்கட் நாகராஜ்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். நல்ல கதை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். உங்களின் மற்ற தளங்களையும் பார்க்க வேண்டும். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி...சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

அம்பாளடியாள் said...

அருமையான கதை சிறுவர்கள் அவசியம் பார்த்து உணரவேண்டிய பகிர்வு .வாழ்த்துக்கள் மிக்க நன்றி
பகிர்வுக்கு .என் தளத்தில் இன்று பட்ட மரங்களும் பறவைகளும் தலைப்பில் ஓர் ஆக்கம் முடிந்தால் உங்கள் கருத்தினையும் தாருங்கள் .நன்றி .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 3

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அம்பாளடியாள்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

அன்பு மேடம்,

மேன்மையான பணியை செய்கிறீர்கள். காலத்திற்கேற்றார் போல் மாற்றி அழகான புகைப்படங்கள் இணைத்து பெரிய விஷயங்கள எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள்

உங்களின் இப்பதிவை (இன்னும் சில பதிவுகளையும்)வலைச்சரத்தில் பதிவிட்டுள்ளேன்.

கீழிருக்கும் சுட்டி உங்கள் பதிவு இணைத்த எனது இடுகை.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_20.html

Kanchana Radhakrishnan said...

வலைச்சரத்தில் எழுதியமைக்கு நன்றி சக்தி பிரபா.