Wednesday, November 2, 2011

92.கெட்டப் பழக்கங்களை விடவேண்டும்........(நீதிக்கதை)ரமேஷ்...தன் நண்பர்களை கேலி செய்வது....அவர்களுடன் சண்டையிடுவது..சரியாக படிப்பதில்லை..பொய் சொல்வது என கெட்டப்பழக்கங்கள் அதிகம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.

அன்று அவனது தந்தை...ரமேஷின் பள்ளி ஆசிரியரைப் பார்த்து....'ரமேஷிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களை போக்குவது எப்படி..' என்றார்.

அதற்கு ஆசிரியர்...'இன்று மாலை அவனை என்னை சந்திக்கச் சொல்லுங்கள்' என்றார்.

மாலை ரமேஷ் ஆசிரியரைப் பார்க்க வந்தான்.

ஆசிரியர் அவனை அழைத்துக்கொண்டு மரங்கள் நிறைந்த தோப்பிற்குள் சென்றார்.

ரமேஷிடம் ஒரு சிறிய செடியைக் காட்டி அதைப் பிடுங்கச்சொன்னார். ரமேஷ் அதை வேருடன் பிடுங்கினான்.
பின்னர் சற்றே வளர்ந்த செடியை பிடுங்கச்சொன்னார்.ரமேஷும் சற்று கஷ்ட்டப்பட்டு அந்த செடியை வேருடன் பிடுங்கினான்.
பின் வளர்ந்த மரத்தை பிடுங்கச் சொன்னார்.ரமேஷ் எவ்வளவோ முயன்றும் அவனால் முடியவில்லை.

ஆசிரியர் சொன்னார். ';கெட்ட பழக்கங்களும் இப்படித்தான்..ஆரம்பத்திலேயே முயன்றால் திருத்திவிடலாம்.இல்லாவிட்டால் அவை மனதில் நன்கு வேரூன்றி விடும்.
பின்னர் அவற்றிலிருந்து விடுபடமுடியாமல் சமூகத்தில் அவன் கெட்டவன் என்ற பெயரிலேயே வாழ நேரிடும்' என்றார்.

புரிந்து கொண்ட ரமேஷ்...'அன்று முதல் நல்ல பையனாக நடந்து கொள்வதாக ஆசிரியருக்கு வாக்கு அளித்தான்.அதன்படியே நல்லவனாக மாறினான்.

கெட்ட பழக்கம் என்று தெரிந்தாலே அதை முளையிலேயே கிள்ளி விடவேண்டும்.

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

இதைப் போல நல்லவழியில் அதைப் புரியவைக்கும் ஆசிரியர் அமைந்துவிட்டால் எல்லோரும் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள்...

நல்ல நீதிக்கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

மகேந்திரன் said...

முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால்
தீயவைகள் கூட நல்லவைகளாக மாறிவிடும்..
அருமையான நீதிக்கதை சகோதரி.

என் குழந்தைகளுக்கு தினமும் தூங்கவைக்கும்போது
உங்கள் கதைதான் சொல்வேன்...
அவர்கள் உங்கள் ரசிகர்கள்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

Kanchana Radhakrishnan said...

//என் குழந்தைகளுக்கு தினமும் தூங்கவைக்கும்போது
உங்கள் கதைதான் சொல்வேன்...
அவர்கள் உங்கள் ரசிகர்கள்//

மிகவும் மகிழ்ச்சி.வருகைக்கு நன்றி மகேந்திரன்.

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

தமிழ் விரும்பி said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர் அது போன்றே..
அருமையானக் கதை...
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அற்புதக்கலை
அதை அழகாகக் கூறுகிறது உங்களின் கதை...

பாராட்டுக்கள், நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சாகம்பரி.வலைச்சரம் பார்த்தேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தமிழ் விரும்பி.

வியபதி said...

கெட்ட பழக்கங்களை விடச்செய்ய இவ்வளவு அருமையான கதை. சிறுவர்கள் படிக்க வேண்டிய நல்லதொரு விஷயம்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வியபதி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வியபதி.

ஹ ர ணி said...

அன்புள்ள...

நிரம்பவும் நிறைவாக உள்ளது. பெருமையாக உள்ளது. குழந்தை இலக்கியத்திற்கென்று ஒரு உலகமாய் உங்கள் வலைப்பூ. கதைகளைப் படித்தேன். அணுவைப்போல சிறியது ஆனால் வலிமையான நீதிகளைக் கொண்டது. மனமார்ந்த வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். இன்றைய இலக்கிய உலகிற்கு இவை அத்தியாவசியத் தேவை. அருமை. அருமை. அருமை.