ஒரு காட்டில் முயல்கள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது.
அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து வந்தது.
அதாவது முயல்கள் அனைத்தும் கோழைகளாக இருந்தன.'வேட்டைக்காரன் வந்ததும் நம்மைத்தான் வேட்டையாடுகிறான். சிங்கம், புலி போன்ற மிருகங்களும் நம்மைத்தான் அடித்து உண்ணுகின்றன.ஆகவே...நம் கூட்டம் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை,ஒன்றாக ஏதேனும் ஒரு குளத்தில் செத்து மடிவோம்' என முயல்களின் தலைவன் கூற
அனைத்தும் ஒரு குளத்தை நோக்கிச் சென்றன.
அந்தக் குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் வசித்து வந்தன.அவை கரையில் அமர்ந்திருந்தன.முயல்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த தவளைகளின் தலைவன் 'முயல்கள் கூட்டமாக நம்மைத்தாக்க வருகின்றன.நாம் கரையில் இருந்தால் ஆபத்துதான்.உடனே குளத்தினுள் சென்றுவிடுவோம்' என முடிவு செய்து குளத்தில் குதித்தன.
இதைப் பார்த்த முயல்கள்....'நாம் கோழைகள் தான் ..நமக்கு தைரியமில்லை தான்...ஆனாலும் நம்மைவிட தைரியமில்லாதவர்களும் இருக்கிறார்கள். இந்த தவளைகள் நமக்கு பயப்படுகின்றன.அவைகளைப் பொறுத்தவரை அவைகளைவிட நாம் தைரியசாலிகள்.ஆகவே நாம் செத்து மடியக்கூடாது....இனி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு....நம்மை யாரேனும் தாக்க நினைத்தால் நாலு கால் பாய்ச்சலில் தப்பிப்பிழைப்போம்' என்று கூறின.
உலகில் நம்மைவிட தைரியமில்லாதவர்களும் இருக்கிறார்கள்.ஆகவே நாம் எந்த சமயத்திலும் தைரியத்தை இழக்காமல் சாதனைகள் புரியவேண்டும்.
8 comments:
அருமையான நீதிக் கதை
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்கிற கவிஞரின் வாக்கை நினைவுறுத்திப் போகும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த,ம 2
அழகான நீதிக் கதை..
நல்ல நீதிக்கதை... முயல்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடம் நன்று....
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரமணி
வருகைக்கு நன்றி சிநேகிதி
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்
அருமையான நீதிக்கதைக்கு ]
நன்றிகள் பல சகோதரி...
வருகைக்கு நன்றி மகேந்திரன்
Post a Comment