Sunday, November 13, 2011

93. கேடு நினைக்கக்கூடாது (நீதிக்கதை)




ஒரு காட்டில் ...ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.

அவ்வப்போது ...வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக்கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்த போது ...நரி ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

அதைப்பார்த்த ஆடுகள் ...'மீண்டும் திருட்டு  ஓநாய்  வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!' எனக் கூச்சல் போட்டன.

ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து 'ஓநாயே உன் மீது  இன்று எந்த தவறும் இல்லாதபோதும் அந்த ஆடுகள் உன் மேல் பழியை சுமத்துகின்றனவே' என்றது.

அதற்கு ஒநாய்.....'ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது.நான் பல முறை அவற்றின் மீது பாய்ந்து பல ஆடுகளைக் கவர்ந்து வந்திருக்கிறேன் .... ஆகவே எப்போது அவைகளுக்குக் கொடுமை நடந்தாலும் என் நினைவு வருகிறது' என்றது.

நாமும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சிறு கெடுதலும் செய்யக்கூடாது.அப்படி செய்தால் நாம் கெடுதல் செய்தவர்க்கு எந்த துன்பம் நேர்ந்தாலும் பழி நம்மை வந்துசேரும்.

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதை....

விச்சு said...

கெடுவான் கேடு நினைப்பான்.சிறுவர்களுக்கு சொல்ல நல்ல கதை.

SURYAJEEVA said...

//'மீண்டும் திருட்டு ஆடுகள் வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!'//

பிழை இருப்பதாக எனக்கு படுகிறது..
குழந்தைகள் தின வாழ்த்துக்களை உங்களுடன் சேர்ந்து நானும் கூறிக் கொள்கிறேன்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி விச்சு .

Kanchana Radhakrishnan said...

suryajeeva said...
//'மீண்டும் திருட்டு ஆடுகள் வந்து ஆட்டைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதே!'//

பிழை இருப்பதாக எனக்கு படுகிறது//..


தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி .தவறை திருத்திவிட்டேன்.