ஒரு மரத்தில் இரு அணில்கள் இங்கும் அங்கும் தாவி குதித்து சந்தோஷத்துடன் விளையாடிக்கொண்டிருந்தன.அப்போது ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்துவிட்டது.
அணில் மேலே விழுந்ததும் விழித்தெழுந்த ஓநாய் அதைப் பிடித்துக்கொண்டது.
ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் 'என்னை விட்டுவிடு ' என கெஞ்சியது.
அதற்கு ' நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொன்னால் உன்னை விட்டுவிடுகிறேன்' என்றது ஓநாய்.'
'சரி' என்று சொன்னது அணில்
'அணில்களாகிய நீங்கள் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்கிறீர்கள் ,ஆனால் வலிமை மிகுந்த நாங்கள் சோகத்துடன் இருக்கிறோமே?'ஏன்" என்று கேட்டது ஓநாய்.
'என்னை விடுவித்து மரத்தின் மீது ஏற அனுமதித்தால் உங்களின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்' என்றது அணில்.
ஓநாயும் அணிலை விட்டுவிட்டது. உடனே தாவிக்குதித்து மரமேறிய அணில் 'நீங்கள் எப்போதும் என்னைப்போன்றவற்றிற்கு கொடுமையே செய்கிறீர்கள். நீங்கள் செய்யும் கொடுமை செயல் உங்களை அரித்துக் கொண்டே இருக்கிறது.அதனால் நீங்கள் சோகத்துடன் இருக்கிறீர்கள்.ஆனால் நாங்கள் உணவுக்காக யாரையும் அழிப்பதில்லை.மரங்களில் விளையும் கனிகளை மட்டுமே உண்கிறோம்.அதனால் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என்றது.
பிறருக்கு துன்பம் செய்யும் யாரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை ஓநாய் உணர்ந்தது.
6 comments:
விதைக்கும் விதையை
அறுவடை செய்வோம் என்பதை
அழகாக கதை சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி.
பிறருக்கு துன்பம் செய்யும் யாரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதை ஓநாய் உணர்ந்தது./
அழகான கதைக்குப் பாராட்டுக்கள்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்....
நல்ல நீதிக்கதை.... பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி மகேந்திரன்.
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் .
Post a Comment