Friday, September 16, 2011

86. " கெடுவான் கேடு நினைப்பான்" (நீதிக்கதை)



ஒரு காட்டில் அரசன் ஒருவன் இருந்தான்.
அவன் நாட்டு மக்களிடம் கொடுமையாக நடந்து வந்தான்.
ஒரு நாள் அவன் வேட்டைக்கு காட்டிற்குப் போனான்.
அங்கு ஒரு நாய் நரி ஒன்றை துரத்தி ஒடியது.நரி அதனுடைய பொந்திற்குள் செல்வதற்குள் அதன் காலை நாய் கடித்து நரியை நொண்டியாக்கியது.

அதே நாய் ஊரில் ஒரு மனிதனைப் பார்த்து குரைக்க மனிதன் கல் எடுத்து அதன் மேல் எறிந்தான்,கல் நாயின் காலை தாக்கி அதை நொண்டியாக்கியது.
பின் அந்த மனிதன் ஒரு குதிரையில் ஏறி ஊருக்குச் சென்றான்.ஒரு பள்ளத்தில் குதிரை ஏறி இறங்கியபோது அந்த மனிதன் கீழே விழுந்து ...காலில் அடிபட்டு நொண்டியானான்.

இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு ...ஒருவருக்கு தீமை புரிந்தால் ..அவர்களுக்கு வேறொருவர் தீமை செய்வர் என்று புரிந்தது.

நாட்டிற்கு வந்த அவன் திருந்தி ....குடி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாமும் ஒருவருக்கு கேடு இழைத்தால்...நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்..என்பதை உணரவேண்டும்.

3 comments:

கும்மாச்சி said...

நல்ல நீதிக்கதை, தொடரட்டும் உங்கள் பணி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கும்மாச்சி.

Kanchana Radhakrishnan said...

என் சிறுவர் உலகம் வலைப்பூ பற்றி எழுதியமைக்கு நன்றி கோவை2தில்லி