கந்தனும் சரவணனும் நண்பர்கள்....
ஆனால் கந்தன் புத்திசாலி...சரவணனனோ மூடனாக இருந்தான்.என்ன சொன்னாலும் அவனுக்கு புரிவதில்லை.
குளிர்காலத்தில் ஒருநாள் நல்ல குளிர்..குளிரால் நடுங்கியபடியே கந்தனும் சரவணனும் இருந்தனர்.அப்போது கந்தன் தன் கைகளை தன் வாயால் ஊதிக்கொண்டிருந்தான்.
சரவணன் ' ஏன் அப்படி செய்கிறாய்' என்றான்.' என் கை விரல்கள் குளிரால் மரத்துப் போயுள்ளன.சூடு ஏற்றுவதற்காக ஊதுகிறேன்' என்றான்' கந்தன்.
பின் கந்தனின் தாய் சூடான காஃபியைக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார்.
காஃபி சூடாக இருந்ததால் ...கந்தன் அதை வாயால் ஊதியபடி உறிஞ்ச ஆரம்பித்தான்.
'ஏன் இப்போது ஊதுகிறாய் ...காஃபி சூடாக இல்லையா' என்றான் சரவணன்..
அதற்கு கந்தன் ' காஃபி சூடாக உள்ளது...ஆகவே சூட்டை குறைக்க வாயால் ஊதுகிறேன் ' என்றான்.
உடனே சரவணன் கோபமாக ' முன்னே குளிர்ச்சிக்காக ஊதுகிறேன் என்றாய்...இப்போது உஷ்ணத்திற்காக ஊதுகிறேன் என்கிறாய். ஒரே வாயிலிருந்து உஷ்ணம்,குளிர் காற்று எப்படி படும்...? என்னை மூடன் என எண்ணி விட்டாயா? நீ பொய்யன்' என்றான்.
கந்தன் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவனுக்குப் புரியாது என உணர்ந்தான்.
முட்டாள்களிடம் பேசும்போது கவனமாய் இருக்க வேண்டும்.
ஏனென்றால் நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு புரியாது.
6 comments:
ரசிக்கும்படி இருந்தது...
வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்.
உண்மைதானே . புரிந்து கொண்டோமெனில் நேரத்தை விரயம் பண்ணவும் தேவையில்லை.
மிக அருமையான படிப்பினைதரும் கதை.
இந்த மாதிரி ஆட்களிடம் வாக்குவாதம் செய்ய கூடாது என்பதை உணர்ந்தலே போதும்.
வருகைக்கு நன்றி சாகம்பரி.
வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்.
Post a Comment