Tuesday, January 25, 2011

62. உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)



ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.

தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.

எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர் அரசவையில் அமைச்சராக இருந்த பீர்பால் என்பவர் மிகவும் புத்திசாலி...

அவர் அரசரைப் பார்த்து 'மன்னா..உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளி நான்கு விரற்கடை தூரம்' என்றார்...

அக்பர்...'அது எப்படி..தங்களால் நிரூபிக்கமுடியுமா' எனக் கேட்டார்.

உடன் பீர்பால்...தன்  இடது கையை எடுத்து இடது கண்ணிலிருந்து  இடது காதுக்கு தன் நான்கு விரல்களை வைத்துக் காட்டினார்.பின் 'அரசே...இது தான் உண்மைக்கும் பொய்க்கும் ஆன தூரம்.எந்த ஒரு விஷயத்தையும் காதால் கேட்பது பொய்யாக முடியலாம்.ஆனால் கண்ணால் பார்ப்பது பொய்யாக ஆக வாய்ப்பில்லை.கண்ணால் கண்டதை சற்று தீர விசாரித்தால் அதுவே மெய்யாக முடியும்' என்றார்.
நாமும் எந்த ஒரு விஷயத்தையும் கேட்பது மூலம் அதை நம்பிவிடாது அதை பார்த்து தீர விசாரித்து உண்மையை உணரவேண்டும்

5 comments:

priya.r said...

பதிவுக்கு நன்றி காஞ்சனம்மா
வழக்கமா கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீர விசாரித்து அறிவதே மெய் என்று தானே சொல்வார்கள்!

Kanchana Radhakrishnan said...

// priya.r said...
பதிவுக்கு நன்றி காஞ்சனம்மா
வழக்கமா கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீர விசாரித்து அறிவதே மெய் என்று தானே சொல்வார்கள்//

உண்மைதான்.ஆனால் கண்ணால் காண்பது கூடியவரை உண்மையாக இருக்கும்.அதையும் தீர விசாரித்து முடிவுக்கு வருவது சிறந்தது.

Radha said...

நான் ராதா, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிகிறேன். நீங்கள் பதிவு செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நிகழ்ச்சி பற்றி உங்களிடம் பேச வேண்டும் உங்கள் mail id or mobile number கிடைக்குமா.என்னை நம்பலாம் உங்கள் no. confidential - ஆக இருக்கும்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ராதா..என்னை கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளலாம்

Kanchana Radhakrishnan said...

sowmyatheatres@gmail.com