Wednesday, January 19, 2011

61.பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)


ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான்.அவன் அவனது தானியக்கிடங்கில் பெரிய பிரும்மாண்டமான உலோகத்தால் ஆன டிரம்களில் அரிசியை சேகரித்து வைத்திருந்தான்.அப்படிப்பட்ட டிரம்களில் ஒன்றில் கீழே சிறு ஒட்டை இருந்தது.அதில் இருந்து வந்த அரிசி வெளியே சிதறிக் கிடந்தது.

அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் இதைப் பார்த்து சிதறிக் கிடந்த அரிசியை உண்டு பிழைத்து வந்தன.

இந்நிலையில் இரு எலிகளில் பேராசை பிடித்த ஒரு எலி மற்றொரு எலியுடன் ..நாம் இந்த ஒட்டை வழியே உள்ளே சென்று விட்டால்,நிறைய அரிசி இருக்கும்.

வேண்டும் வரை உண்ணலாம் வா என்றது.

ஆனால் மற்ற எலியோ "பேராசை வேண்டாம்.இப்போது நமக்கு கிடைக்கும் அரிசியே போதும் " என்று கூறிவிட்டது.

அந்த எலியின் பேச்சை கேட்காத முதல் எலி,அந்த ஒட்டையின் மூலம் உள்ளே சென்று...அரிசியை சாப்பிட ஆரம்பித்தது.இதனால் அது உள்ளே நுழையும் போது

இருந்ததை விட பருத்து விட்டது.அதனால் இப்போது அந்த சின்ன ஒட்டையின் மூலம் வெளியே வர இயலவில்லை.

ஒரு நாள் டிரம்மிலிருந்த அரிசியை விற்பனைக்கு எடுத்தான் வியாபாரி.அப்போது அதில் பதுங்கியிருந்த குண்டு எலியைக் கண்டு அதை அடித்துக் கொன்றான்.

பேராசை இல்லாத எலி பிழைத்தது.

பேராசை கொண்ட எலி இறந்த்து.

பேராசை பெரு நஷ்டமாகும்.

5 comments:

priya.r said...

பதிவுக்கு நன்றி காஞ்சனா அம்மா

priya.r said...

எனது தோழிகள் போடும் புது பதிவுகள் என் மெயில்க்கு வந்து

தெரியபடுத்துகின்றன .,அது போல உங்களுடைய சிறுவர் கதைகளையும் பதிவு போடும் போது

தயவு செய்து தெரியபடுத்த முடியுமா காஞ்சனாம்மா .

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Priya.

sury siva said...

நல்ல வேளை. அரிசி மூட்டை என்று எழுதினீர்கள்.
வெங்காய மூட்டை என்று எழுதியிருந்தால்,
ஒரு ஆயிரம் பேர் அந்த மூட்டைக்குள்
உடனே நுழைந்திருப்பார்கள்.

பேராசை பெரு நஷ்டம் என்ற முது மொழி
உரக்கச்சொல்கிறது உங்கள் கதை.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி sury.