Tuesday, January 4, 2011

58.குரங்கும்...இரண்டு பூனைகளும்- (நீதிக்கதை)


இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன....ஆனால் அவைகளுக்குள் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு அப்பம் கிடைத்தது.அவை இரண்டும் சாப்பிட நினைத்த போது ..அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் சண்டை வந்தது.

பிறகு இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணின .அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை சமமாக பிரித்துத் தரச்சொல்ல குரங்கும் சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்தது.

அப்பத்தை இரண்டாக்கி தராசின் ஒவ்வொரு தட்டிலும் அப்பத்துண்டை வைத்தது குரங்கு.தராசின் ஒரு தட்டு சற்று கீழே செல்ல,குரங்கு அந்த தட்டில் உள்ள

அப்பத்தை ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது .இப்போது மற்றொரு தட்டு கீழே தாழ்ந்தது.அந்த தட்டில் இருந்த அப்பத்தை சிறிது

கடித்து விட்டு மீண்டூம் போட்டது..

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ...குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் " இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்" என மீதமுள்ளதை கேட்டன

ஆனால் குரங்கோ,மீதமிருந்த அப்பம் 'நான் இது வரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்...அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம்.ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும்,ஒற்றுமையுடனும் இருக்கவேண்டும்.

6 comments:

Sobia Anton said...

அற்புதமாக் இருக்கிறது. இன்னும் எதிர்பார்க்கிறேன்.

priya.r said...

காஞ்சனா அம்மா ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
வர முடியாமைக்கு வருந்துகிறேன்.
நல்ல கதை !
சகோதரருக்குள்ளும் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும் என்பதையும் இதன் நீதியாக சொல்லலாம் !

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Sofia.

Kanchana Radhakrishnan said...

Thanks Priya.r
புத்தாண்டு வாழ்த்துக்கள் .

goma said...

நல்ல நல்ல கதைகளின் தொகுப்பு ...அந்தக்காலத்து அம்புலிமாமா, ஈசாப் நீதிக்கதைகள் வாசித்த உணர்கிறேன்.தொடரட்டும் உங்கள் பணி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Goma.