Thursday, September 2, 2010
40.புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)
அருண் ஒரு நாள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான்.கிட்டதட்ட இருட்டும் சமயம்.
அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது...
அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.வந்தவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்து..அவன் பசியையும் தீர்க்க
பழங்களைப் பறித்து கொடுத்தது.
மரத்தின் கீழே பசியோடு இருந்த புலி குரங்கிடம் ' குரங்கே அந்த மனிதனை நீ கீழே தள்ளு ...எனக்கு பசி ' என்றது.
ஆனால் குரங்கோ ..'இவன் என்னை நம்பி வந்தவன்.அதனால் தள்ள மாட்டேன்.நம்மை நம்பியவர்க்கு துரோகம் செய்யக்கூடாது' என மறுத்தது.
பிறகு குரங்கு தூங்க ஆரம்பித்தது...அப்போது புலி..'மனிதனே...எவ்வளவு நேரமானாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் ..எனக்கு கொள்ளைப் பசி.
அந்த குரங்கையாவது தள்ளி விடு ..நான் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன் ' என்றது.
உடனே அருண் .. தூங்கும் குரங்கை தள்ளி விட ..புலி அதை தின்று விட்டு மறைந்தது.
தன்னை நம்பியவனை காப்பாற்றியது குரங்கு ..தனக்கு உதவிய குரங்கை தன்னை காத்துக்கொள்ள தள்ளிவிட்டு ..நம்பிக்கை துரோகம் செய்தான் அருண்.
நாம்..இந்த கதை மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது - நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.ஆபத்துக்கு நமக்கு உதவியவர்களின் நற்செயலை மறக்கக் கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல கதை
இதை வேறு விதமாகவும் சொல்லுவார்கள்... மனிதன் குரங்கை தள்ளிவிட்டவுடன், குரங்கு வேறு ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தப்பிவிட்டது. அது மனிதனைப் பார்த்துச் சொன்னது, நம்பிக்கை துரோகத்தைப் போல் மோசமானது ஒன்றும் கிடையாது... என்னை நம்பி அடைக்கலம் வந்த உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சொல்லி, வேறு மரத்திற்கு தாவி ஓடிவிட்டது என்றும் சொல்லுவார்கள்.
நீங்கள் சொல்வதும் நன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட நீதியை வைத்தும் ஒரு கதை எழுதி விட்டால் போயிற்று.
வருகைக்கு நன்றி இராகவன்.
வருகைக்கு நன்றி Velu G.
Nice madam
Thanks Priya.
Post a Comment